Published:Updated:

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்... கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? 2 மினிட்ஸ் ப்ளீஸ்! #StepByStepGuide

விகடன் வாசகர்களே... உங்களுக்கும் இந்த மாபெரும் நட்சத்திர விருது விழாவில் பங்கேற்க ஒரு வாய்ப்பு. நீங்கள் இதற்காகச் செய்ய வேண்டியது என்ன? 2 மினிட்ஸ் ப்ளீஸ்!

Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

தமிழ் சினிமா 2019... பல்வேறு படங்கள், பல்வேறு திறமைகள், பல்வேறு சாதனைகள். இந்த ஆண்டில் உங்களின் ஃபேவரைட் படம் எது? அதிக கவனம் ஈர்த்த படம் எது? சிறந்த நடிகர், நடிகையர் யார் யார்? இயக்குநர்? தயாரிப்பாளர்? இசையமைப்பாளர்? எல்லோரையும் அங்கீகரிக்க வழக்கம்போல காத்திருக்கிறான் விகடன்.

Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

தொடர்ந்து 13-வது ஆண்டாகச் சாதனையாளர்களையும் அவர்களின் கலைப் படைப்புகளையும் கௌரவித்து, பிறக்கும் புத்தாண்டைத் தொடங்கவிருக்கிறது ஆனந்த விகடன். 2020-ம் ஆண்டின் முதல் நிகழ்வாக, மிகப் பிரமாண்டமாக, திரையுலக ஆளுமைகளின் முன்னிலையில் `ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா' ஜனவரி 11-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பாக, `திறமைக்கு மரியாதை’ அளிக்கும் நிகழ்வில் `வாசகர்களுக்கு மரியாதை’ அளிக்க விரும்புகிறான் விகடன். ஆம், உங்களுக்கும் இந்த மாபெரும் நட்சத்திர விருது விழாவில் பங்கேற்க ஒரு வாய்ப்பு. நீங்கள் இதற்காகச் செய்ய வேண்டியது இதுதான்.

இந்த ஆண்டு விகடன் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் தயாராகியிருக்கிறது. இதில் விருது பெறப் போகிறவர் யார், விகடன் விமர்சனக் குழுவின் தேர்வு என்னவாக இருக்கும் என நீங்கள் கணித்தால் போதும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் சென்று உங்களின் வாக்குகளை இப்போதே பதிவு செய்யுங்கள். கூடவே 2019 தமிழ் சினிமா பற்றி மூன்றே வார்த்தைகளில் ஒரு பன்ச்-ம் வேண்டும். வெற்றியாளர்களுக்குச் சென்னையில் நடக்கவிருக்கும் விகடன் விருது விழாவுக்கான பாஸ் அளிக்கப்படும்.

எப்படி வாக்களிப்பது?

Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019
Login Popup
Login Popup
  • http://bit.ly/AVCA2019 - இந்தப் பக்கத்தில் 32 விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.

  • 'VOTE' பட்டனை க்ளிக் செய்தவுடன் 'Login' செய்வதற்கான Pop-up ஒன்று ஓப்பனாகும். நீங்கள் ஏற்கெனவே விகடன் தளத்தில் ரெஜிஸ்டர் செய்த வாசகராக இருப்பின் உங்களின் Facebook, Google அல்லது பிற இமெயில் மற்றும் போன் நம்பர் மூலமாக 'Login' செய்யலாம். உங்கள் விகடன் கணக்குடன் மொபைல் நம்பர் முன்னரே இணைந்திருப்பின், 'Terms and Conditions' விவரங்களைப் படித்துப் பார்த்துவிட்டு 'I agree' பட்டனை க்ளிக் செய்து 'Submit' பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

  • ஒருவேளை உங்கள் கணக்கில் மொபைல் எண் இடம்பெறாமல் இருப்பின், அதைப் பதிவு செய்து OTP-ஐ verify செய்துவிட்டால் போதுமானது.

  • உங்கள் இமெயில் அல்லது மொபைல் நம்பர் இதற்குமுன் விகடன் தளத்தில் பயன்படுத்தாத ஒன்றாக இருப்பின், 'New User'-ஆக ரெஜிஸ்டர் செய்து பின் 'Login' செய்யலாம். இதற்கும் உங்களின் இமெயில் மற்றும் மொபைல் எண் தேவைப்படும். OTP verification செய்ய வேண்டும்.

New User PopUp
New User PopUp
Terms & Conditions PopUp
Terms & Conditions PopUp
  • அதன் பிறகு ஒவ்வொரு விருதுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளைப் பார்த்துவிட்டு, அவற்றுள் விகடன் விருது பெறவிருப்பவர்கள் யார் என்று கணித்து உங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.

  • ஒரு சில விருதுகளுக்கு மட்டும் 5-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருக்கும். கடைசியில் இருக்கும் `Arrow Icon'-ஐ க்ளிக் செய்தோ ஸ்வைப் செய்தோ மொத்த பரிந்துரைகளையும் பார்க்கலாம். மொபைலிலும் இதைக் கவனித்து உங்களின் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.

Nominations
Nominations
  • 32 விருதுகளுக்கும் வாக்களித்த பின்னர், கடைசியாக `2019 தமிழ் சினிமா பற்றி மூன்றே வார்த்தைகளில் ஒரு பன்ச் சொல்லுங்கள்!' என்ற இடத்தில் உங்களின் `Slogan'-ஐ பதிவு செய்து 'Submit' பட்டனை அழுத்தினால் போதுமானது.

  • நிறைய வாசகர்கள் விருதுகளைச் சரியாகக் கணித்திருப்பின், அவர்கள் கொடுத்திருக்கும் 'Slogan' அடிப்படையில் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Enter Your Slogan
Enter Your Slogan
  • நீங்கள் வெற்றியாளராக இருப்பின், உங்களை விருது நிகழ்வுக்கு அழைக்க உங்களின் இமெயில் மற்றும் மொபைல் எண் சரியானதாக இருக்கவேண்டியது அவசியம். எனவே, அதை ஒருமுறைக்கு இருமுறை செக் செய்துவிட்டுப் பதிவு செய்யவும்.

உங்கள் நண்பர்களிடமும் இந்த லிங்க்கை பகிர்ந்து அவர்களையும் போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லுங்கள். உங்களின் ஆதர்ச நட்சத்திரங்களை நேரில் பார்ப்பதற்கான இந்தச் சிறந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விகடன் உங்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கக் காத்திருக்கிறான்.
வாசகர்களுக்கு மரியாதை!