Published:Updated:

ஆஸ்துமா நோயாளிகளுக்கான மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு; இந்த ஆண்டும் நடைபெறாது!

மீன் பிரசாதம் ( PTI )

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் இந்த மீன் பிரசாதத்தைப் பெற அங்கே கூடுவது வழக்கம்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கான மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு; இந்த ஆண்டும் நடைபெறாது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் இந்த மீன் பிரசாதத்தைப் பெற அங்கே கூடுவது வழக்கம்.

Published:Updated:
மீன் பிரசாதம் ( PTI )

ஒவ்வோர் ஆண்டும், பருவமழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மிருகசீர கார்த்திகையின்போது மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் இந்த மீன் பிரசாதத்தைப் பெற அங்கே கூடுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு
மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு
PTI

இந்நிலையில், தொற்றின் தீவிரம் கட்டுக்குள் வந்தபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் வருடாந்தர நிகழ்வு இந்த ஆண்டும் நடைபெறாது என மீன் பிரசாதத்தை வழங்கும் பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்டை வைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும். சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்தை வெல்லத்தோடு சேர்த்துக் கொடுக்கப்படும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இதை எடுத்துக்கொண்டால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism