Published:Updated:

கண்ணீர்விட்ட ராஜேந்திர பாலாஜி முதல் பஞ்சாப்பில் பிரதமர் சந்தித்த ஆபத்து வரை..!

Junior Vikatan Subscription offers
News
Junior Vikatan Subscription offers

பரபரப்பான அரசியல் கட்டுரைகளுடன் வி.ஐ.பி டின்னர்... ஸ்க்ரீன்ஷாட்... போன்ற புதிய பகுதிகளுடன் வெளியாகிறது ஜூனியர் விகடன். இந்த இதழில் என்ன ஸ்பெஷல்?

குழப்பிய விசுவாசி... உதவிய பா.ஜ.க... சிக்கவைத்த ‘சிக்னல்... காருக்குள் கண்ணீர்விட்ட பாலாஜி!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய, எட்டு தனிப்படைகள் 19 நாள்கள் நடத்திய ‘சேஸிங்’ ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.போலீஸ் விசாரணையில், கேரளா, ஏற்காடு, பெங்களூரு என்று பாலாஜி பதுங்கித் திரிந்த கதையெல்லாம் காக்கிகளையே மலைக்க வைத்திருக்கிறது. இனி அடுத்தடுத்து அவர்மீது வழக்குகள் பாயத் தயாராகும் நிலையில், ‘இத்தனை நாள்கள் எங்கே இருந்தார் பாலாஜி? அவரை எப்படி வளைத்தது காவல்துறை?’ என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. த்ரில்லர் சினிமா காட்சிகளை மிஞ்சும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைதின் பரபர ‘சேஸிங்’விவகாரங்களோடு கவர் ஸ்டோரி...

மிஸ்டர் கழுகு!

முதல்வருக்கு மரியாதையே கொடுப்பதில்லை... ஸ்டாலின் முன்னிலையில் எகிறிய வேலு... கனிமொழிக்கு அமித்ஷாவின் பிறந்தநாள் வாழ்த்து... ரத்தான பிரதமரின் பொங்கல் விழா... சட்டமன்ற நிகழ்வுகள் போன்ற அரசியல் நிகழ்வுகளின் பின்னணி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நேர்காணல்...

ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்துவரும் இந்த நெருக்கடியான நேரத்தில், ‘அம்மா மினி கிளினிக்’குகளை மூடுவது அவசியமா?, கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு, கோவையில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட தி.மு.க கூட்டத்துக்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

வி.ஐ.பி டின்னர் சீமான்

உணவு சார்ந்து சீமான் பேசும் விஷயங்கள் அவ்வப்போது சர்ச்சையாவதுண்டு. ஆனால், இயல்பாகவே அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதிலும், நண்பர்களுக்குச் சமைத்துப் பரிமாறுவதிலும் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டுஅரசியல் தலைவர்கள் தாங்கள் யாருடன் இப்போது இரவு உணவு உண்ண விரும்புகிறார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் சுவாரஸ்ய தொடர். இந்த இதழில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டின்னர் பிளான் பற்றிப் பகிர்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சாப்பில் பிரதமர் சந்தித்த ஆபத்து!

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி ஜனவரி 5-ம் தேதி பஞ்சாப் சென்றார். ‘பஞ்சாப்பில் என் சகோதர, சகோதரிகளுடன் இன்று இருக்கப் போகிறேன்’ என்று பெருமையுடன் ட்விட்டரில் அறிவித்துவிட்டுக் கிளம்பியவர், பாதியிலேயே திரும்பிவர நேர்ந்தது. ‘பஞ்சாப் காங்கிரஸ் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரியாகச் செய்யாமல், பிரதமரை ஆபத்தில் சிக்கவைத்தது’ என்று பா.ஜ.க குற்றம்சாட்ட, ‘பிரதமர் பேச இருந்த மைதானத்தில் கூட்டம் இல்லாததால்தான், அவர் திரும்பிப் போய்விட்டார்' என்று பதிலடி கொடுக்கிறது காங்கிரஸ். பஞ்சாப் விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை விவரிக்கும் சிறப்புக் கட்டுரை...

இப்படி இந்த இதழில் ஜூனியர் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஜூனியர் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.

மேலும் இந்த இதழின் ஜூனியர் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்.

உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் விவரங்கள்

* Save ரூ.800 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.949 பெறுங்கள் கூடுதலாக 1 மாதம் இலவசம்!

* Save ரூ.1,199 > ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1799 பெறுங்கள் கூடுதலாக 2 மாதம் இலவசம்!

* Save ரூ.11000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ரூ.8,999 பெறுங்கள்!

விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை! l நிபுணர்கள் பங்குபெறும் இலவச ஆன்லைன் கருத்தரங்குகளில் பங்கேற்கலாம்