கமல், விஜய்சேதுபதி, பகத்... ‘விக்ரம்’ கூட்டணி ரகசியம் சொல்லும் லோகேஷ் கனகராஜ்
" கமல் ரசிகனான எனக்கு கமல் சார் படம் வழியாவே ‘விக்ரம்' வாய்ப்பு கிடைச்சது. சந்தோஷமா எடுத்திருக்கிறேன்'' என நெகிழும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல், சேதுபதி, பகத் பாசில்... எனப் பெருங்கூட்டணி அமைந்ததன் ரகசியம், இந்தக் கூட்டணியில் திடீரென சூர்யா என்ட்ரி கொடுத்தது எப்படி, அனிருத் உடனான பலமான நட்பு... எனப் படம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் விரிவான பேட்டி...
" நிரபராதி என நீதிமன்றம் சொல்லவில்லைதான்; ஆனால்..." - மனம் திறக்கும் பேரறிவாளன்
"இப்போதும் பேரறிவாளன் நிரபராதி என நீதிமன்றம் சொல்லவில்லை என்பது உண்மைதான். நான் நிரபராதி என்று தீர்ப்பில் இல்லை. தீர்ப்புகள் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்குமா எனத் தெரியவில்லை. எல்லாருடைய துன்பங்களும் வேதனைக்குரியதுதான். ஒரு மனிதனுடைய இழப்புக்கும் துன்பத்துக்கும் ஒரு நிரபராதியின் உயிரோ, வாழ்க்கையோ ஈடுகட்ட முடியுமா? எனக் கேட்கும் பேரறிவாளனிடம், 31 ஆண்டுக்கால சிறை வாழ்க்கை குறித்து சொல்ல ஏராளமான கதைகள் இருக்கின்றன.
வேதனை, விடுதலை ஏக்கம், விடா முயற்சியுடன் நடத்திய சட்டப்போராட்டம், துணை நின்ற தோழர்கள், உறுதி காட்டிய உறவினர்கள்... என மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக பேரறிவாளன் பகிர்ந்து கொண்ட விரிவான நேர் காணல்...
ரான்சம்வேர் என்னும் சைபர் அசுரன்!
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களை அழைத்து, 'உங்களைத் தூக்கம் இழக்கவைக்கும் மூன்று விஷயங்கள் என்ன' என்று கேட்டால், அவர்கள் பட்டியலிடும் விஷயங்கள் ரான்சம்வேர், ரான்சம்வேர், ரான்சம்வேர் மட்டுமே. அந்த அளவுக்கு அவர்களை மிரள வைக்கிறது ரான்சம்வேர் (ransomware) என்ற கம்ப்யூட்டர் வைரஸைப் பரப்பும் குழு.
ஒரு நாட்டின் அரசையே செயலிழக்க வைக்கும் அளவுக்கு வல்லமையுடன் செயல்படும் இந்த ஹேக்கர் குழு எங்கிருந்து இயங்குகிறது... எப்படி சிக்க வைக்கிறார்கள்..? கம்ப்யூட்டரை ஹேக் செய்த பின்னர் நடக்கும் அதிர வைக்கும் பேரம் போன்ற தகவல்களுடன் கூடிய விரிவான சிறப்புக் கட்டுரை...
நெஞ்சுக்கு நீதி - சினிமா விமர்சனம்
உதயநிதிக்கு சுற்றி நடப்பவற்றைப் பார்த்து பாடம் கற்று, முதிர்ச்சியோடு பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று போராடி என கனமான கதாபாத்திரம். அதைச் செம்மையாய்ச் செய்தவகையில் அவரின் சினிமா வாழ்க்கையில் ‘நெஞ்சுக்கு நீதி' முக்கியமான படம்.
விகடன் மதிப்பெண்: ?/100
எந்தச் சர்க்கரை உடம்புக்கு நல்லது? - ஆரோக்கியம் ஒரு பிளேட் - தொடர்
‘வெள்ளைச் சர்க்கரை ரொம்பவே மோசம்... நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, தேன்... இதெல்லாம் நல்லது' என்று சிலர் சொல்கிறார்கள். எந்தச் சர்க்கரை உண்மையிலேயே நல்ல சர்க்கரை, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது எது, சர்க்கரை சாப்பிட்டால் உடல் எடை கூடுமா கூடாதா, செயற்கைச் சர்க்கரை பயன்படுத்தலாமா, வேண்டாமா... என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களைச் சொல்கிறது 'ஆரோக்கியம் ஒரு பிளேட்' தொடர்...
உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் முழு விவரங்கள்
* ரூ.1749 மதிப்பிலான 1 வருட விகடன் ஆன்லைன் சந்தா தற்பொழுது ரூ.999 மட்டுமே! மேலும் இதனுடன் 1 மாத சந்தா + ரூ.100 மதிப்புள்ள E-Books இலவசமாகப் பெறுங்கள்.
* ரூ.2,998 மதிப்பிலான 2 வருட விகடன் ஆன்லைன் சந்தா தற்பொழுது ரூ.1,999 மட்டுமே! மேலும் இதனுடன் 2 மாத சந்தா + ரூ.100 மதிப்புள்ள E-Books இலவசமாகப் பெறுங்கள்.
* ரூ.19,999 மதிப்பிலான விகடன் ஆன்லைன் ஆயுள் சந்தா தற்பொழுது ரூ.9,999 மட்டுமே! மேலும் இதனுடன் ரூ. 500 மதிப்புள்ள E-Books + ரூ.250 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் இலவசமாகப் பெறுங்கள்.
விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!