பணப் பட்டுவாடா... பரிசு மழை... உச்சகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்!
தமிழகத்தின் சந்துபொந்துகளிலெல்லாம் அரசியல் அனல் பறக்கிறது. வாக்காளர்களைக் குளிர்விக்க பணப்பட்டுவாடா, பரிசு மழை என கரன்ஸி யுக்தியை வேட்பாளர்கள் கையிலெடுத்திருப்பதால், உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது உள்ளாட்சித் தேர்தல் களம். தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கழகங்களும் வியூகம் அமைத்து, பணப் பட்டுவாடாவில் இறங்கியிருக்கின்றன. ஒருசில வார்டுகளில் கழகங்களுக்கே ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும் விதமாக, சுயேட்சை வேட்பாளர்களும் கோதாவில் குதித்திருக்கிறார்கள். சென்னை வேளச்சேரியில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக, அ.தி.மு.க-வைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். “அ.தி.மு.க-வை மட்டுமே குறிவைத்துக் கைது செய்கிறார்கள். தி.மு.க-வினரின் பரிசுப் பொருள்கள், கரன்ஸி விநியோகத்தை போலீஸார் கண்டுகொள்வதில்லை. தேர்தல் விதிகள் பல இடங்களில் மீறப்படுகின்றன” என அ.தி.மு.க தரப்பில் புகார் வாசிக்க, தேர்தல் களத்தின் உச்சக்கட்ட காட்சிகள் குறித்து அலசும் கவர் ஸ்டோரி.
திரளும் முதல்வர்கள்... திகிலில் மத்திய அரசு...
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சொந்தக் கட்சியையே கவிழ்க்கும் உள்ளடி வேலைகள் கலைக்கட்டிக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளுடனான முதல்வர் ஆலோசனை உள்ளிட்ட முக்கிய அரசியல் நிகழ்வுகளின் பின்னணிகளை விவரிக்கும் மிஸ்டர் கழுகு....
அறிவியலை அல்ல... ஜோதிடத்தை நம்பும் அரசு இது! முனைவர் ரவிக்குமார் எம்.பி
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டிலிருந்து 100-வது ஆண்டுக்குச் செல்லும் ‘அமிர்த காலத்துக்கான’ அடிக்கல்லை பட்ஜெட்டின் மூலம் நாட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த அரசு அறிவியல்மீது நம்பிக்கைக்கொண்ட அரசாக இல்லை; ஜோதிடத்தை நம்புகிற அரசாக இருக்கிறது. அதனால்தான் பொருளாதார அருஞ்சொற்கள் புழங்க வேண்டிய பட்ஜெட்டில் ‘அமிர்த காலம்’ என்று ஜோதிடத்தில் பயன்படுத்தப்படும் சொல்லை நிதியமைச்சர் பயன்படுத்தியுள்ளார். நாட்டின் நிதி நிலையை மேம்படுத்த வேண்டிய நிதியமைச்சரே ஜோதிடராகி விடும்போது இந்த நாட்டின் எதிர்காலத்தை எண்ணி அச்சப்படாமல் இருக்க முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்து முனைவர் ரவிக்குமார் எம்.பி. எழுதும் சிறப்புக் கட்டுரை...
“மாணவர்களுக்கு காவியும் வேண்டாம்... ஹிஜாப்பும் வேண்டாம்!” வகுப்பெடுக்கிறார் வானதி சீனிவாசன்...
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களைக் குறிவைத்து நடைபெற்றுவரும் ‘ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள்’ நாடு முழுக்கப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் ஹிஜாப் விவகாரத்தில் பா.ஜ.க மீது எழுந்திருக்கும் விமர்சனங்கள், தமிழகத்தில் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் பா.ஜ.க-வின் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பா.ஜ.க-வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனிடம் ஒரு நேர்காணல்.
சபாநாயகரா... சர்ச்சை நாயகரா? புதுச்சேரியில் வெடித்த மரபு மீறல் விவகாரம்...
‘‘அரசியல் செய்வது சபாநாயகரின் வேலை அல்ல. அப்படி அரசியல் செய்ய வேண்டுமென்றால் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம். அதைவிடுத்து பா.ஜ.க-வின் ஏஜென்டாக சபாநாயகர் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ - புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தைதான் இப்படி கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி! என்னதான் பிரச்னை நடக்கிறது என்பது குறித்து ஓர் அலசல் கட்டுரை.
இப்படி இந்த இதழில் ஜூனியர் விகடனின் கட்டுரைகள் எல்லாமே தனிச்சிறப்பு. அது மட்டும் இல்லாமல் ஜூனியர் விகடனில் இன்னும் பல தகவல்களும், செய்திகளும் காத்திருக்கின்றன. படித்து மகிழுங்கள்.
மேலும் இந்த இதழின் ஜூனியர் விகடனின் ஒரு வருட சந்தாவைப் பெற இங்கு க்ளிக் செய்யவும்.
இது மட்டுமில்லாமல், தினம்தோறும் சந்தா செலுத்தும் வாசகர்களில் இருந்து, 10 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.100 மதிப்பிலான அமேசான் கிப்ட் கார்ட் பரிசாகவும் ஆயுள் சந்தா வாங்குவோர்க்கு ரூ.250 அமேசான் கிப்ட் கார்ட் பரிசாகவும் வழங்கவிருக்கிறோம்.
உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் முழு விவரங்கள்
* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் ரூ.899 ரூபாய் மட்டுமே! மேலும் இதனுடன் 1 மாத சந்தா + ரூ.100 மதிப்புள்ள இ -புத்தகம் இலவசமாக பெறுங்கள்!
* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷன் ரூ.1,799 மட்டுமே! மேலும் இதனுடன் 2 மாத சந்தா + ரூ.100 மதிப்புள்ள இ -புத்தகம் இலவசமாக பெறுங்கள்!
* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே! மேலும் இதனுடன் ரூ.500 மதிப்புள்ள இ-புக்ஸ் இலவசமாகப் பெறுங்கள்!
விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!