Published:Updated:

கலை இலக்கியா எழுதிய "கதை வடிவில் காமத்துப்பால்" இ-புக் முற்றிலும் இலவசமாக!

திருக்குறளின் காமத்துப்பாலைப் பள்ளி மாணவர்களிடமிருந்து நம் சமுதாயம் மறைப்பதை நாம் கண்டும், கேட்டும் தான் வாழ்கிறோம்.

பாடப்புத்தகங்களிலும், பேச்சுப் போட்டிகளிலும் அதனைத் தவிர்ப்பதைப் பரவலாகக் காணலாம். பெரியவர்களுமே கூடத் திருக்குறளைப் படிக்கும்பொழுது காமத்துப்பாலைத் தவிர்ப்பதைக் காணலாம்.

காமம் என்பது காதல் உணர்வுகளைக் காட்டும். காமம் என்பது அருவருக்கத்தக்க சொல்லா? இல்லை. காமம் என்பது காதலைக் குறித்த சொல். இது உடல் இன்பத்தை மட்டும் எடுத்துக் காட்டுவது இல்லை. பொதுவாக, காமம் என்ற சொல் உடலின்பத்தையோ வெறியையோ உணர்த்தும் வகையில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால்தான் காமத்துப்பால் எனக் கேட்டவுடனே சிலர் பயம் கொள்கின்றனர். காமம் என்னும் சொல்லைக் கேட்டவுடன் பலருக்கு வாத்சாயனாரின் நூலான 'காமசாத்திரம்' நினைவுக்கு வந்து குழப்பமடைகின்றனர்.

உலகத்திலுள்ள எல்லா உயிர்கட்கும் காம உணர்ச்சி இயல்பான ஒன்று; பசிப்பதுபோல், தாகம் எடுப்பதுபோல் ஏற்படும் ஓர் உணர்வு. மனிதர்கள் ஆணும் பெண்ணுமாகக் கூடி மகிழ்வது இயல்பாகும். இக்கூடுதலில் விளையும் உள்ளப் புணர்ச்சியையும் உடல் புணர்ச்சியையும் கூறுவது காமத்துப்பால்.

தலைவன்-தலைவி அல்லது கணவன்-மனைவி இடையே உள்ள உள்ளன்பின் வெளிப்பாடாக இவை உள்ளனவே தவிர எதுவும் கொச்சையாக இல்லை. ஆண், பெண் இடையே இன்பம் எப்படி உச்சம் அடைகிறது என வள்ளுவர் இரண்டடிகளால் சொல்லும் ஒவ்வொன்றையும், நமக்குக் கதை வடிவில் சொல்வதே இந்த மின்னூலின் அதிசயம்.

காதலுக்கு உள்ள குணம் கள்ளுக்குக் கூட இல்லை. காதல் தன்னை நினைத்தாலே மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டாலே போதும் மகிழ்ச்சியை தருகிறது. கள்ளு அப்பிடி செய்யுமா? குடித்தால் தானே. ஆக காதல் கள்ளை விட போதை தரும் ஒன்று என்று அன்றே சொல்லிவிட்டார் வள்ளுவர். அந்த குறள் விளக்கத்தைக் கதை வடிவில் எளிய முறையில் உருவாக்கிக் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

கலை இலக்கியா எழுதிய "கதை வடிவில் காமத்துப்பால்" இ-புக் முற்றிலும் இலவசமாக!

இரவுநேர நாய் போலவும், வலிந்து வன்முறையால் காதலைப் பெற நினைப்பதும் பெண்ணை அடக்கியாள முயல்வதும் மன உணர்வுகளுக்கு எந்த வித பாத்தியதையும் இல்லாத தூண்டப்பட்ட வெற்று உடல் உணர்ச்சிகளுக்குக் காதல் என்று பெயர் சூட்டி டாஸ்மாக்கில் மூழ்கி பெண்ணைக் குற்றம் சொல்லித் திரியும் இன்றைய பொழுதுபோக்கு தலைமுறைக்கு இந்த மின்னூல் மிகவும் அவசியமான ஒன்று என்று தன்னுடைய நூல் பேசப்போகும் பொருள் என்ன என்பதை `பளிச்’ என்று முகவுரையில் கூறுகிறார் நூலாசிரியர் கலை இலக்கியா.

"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள"

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன

இப்படி ஒரு காமத்துப்பால் குறள் விளக்கத்தை எளிய வகையில் பொருள்சுவை குறையாது கதை வடிவில், எளிய நடையில் அழகிய மொழியில் எடுத்து சொல்லப்பட்டு இருப்பதே இந்த மின்னூலின் அழகியல்.

"கதை வடிவில் காமத்துப்பால்" புத்தகத்தைப் பெறுவதற்கு நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறை கீழே தரப்பட்டுள்ளது.

இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

கலை இலக்கியா எழுதிய "கதை வடிவில் காமத்துப்பால்" புத்தகத்தை இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறைகள்:

உங்களது மொபைலில் Vikatan App-ஐ (Android only) டவுன்லோடு செய்து, ரெஜிஸ்டர் செய்தால் போதும், இந்த இ-புத்தகத்தை இலவசமாக முழுமையாக வாசிக்கலாம்.

நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புத்தகம் விகடன் App-ல் உள்ள Library-ன் EBook பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு