Published:Updated:

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக காவேரி மருத்துவமனை நடத்தும் சிறப்பு கிரிக்கெட் போட்டி!

காவேரி மருத்துவமனை

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கிரிக்கெட் தொடரை நடத்துகிறது காவேரி மருத்துவமனை.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக காவேரி மருத்துவமனை நடத்தும் சிறப்பு கிரிக்கெட் போட்டி!

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கிரிக்கெட் தொடரை நடத்துகிறது காவேரி மருத்துவமனை.

Published:Updated:
காவேரி மருத்துவமனை

சென்னையில் உள்ள 'காவேரி மருத்துவமனை' மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'கார்ப்பரேட் கிரிக்கெட் டோர்னமென்ட்' எனத் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துகிறது. சுமார் 35-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் அணிகள் பங்குபெறவுள்ள இந்தப் போட்டிகள் வரும் அக்டோபர் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி வரும் 16-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டிகள் நடக்கும் YMCA மைதானத்தில் (அக்டோபர் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை) ஒரு சிறப்பு மொபைல் வேனும் இடம்பெறுகிறது. அதில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான Mammogram பரிசோதனை இலவசமாக எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்தப் பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் முன்கூட்டியே மருத்துவமனையுடன் பதிவுசெய்வது கட்டாயம்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்பவர்கள்
சிறப்பு விருந்தினராக பங்கேற்பவர்கள்

திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் மித்ரன் ஜவஹர், மிர்ச்சி விஜய், நடிகை உமா ரியாஸ், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.