Published:Updated:

கோமல் அன்பரசன் எழுதிய கொலை கொலையாம் காரணமாம் இ-புக் முற்றிலும் இலவசமாக!

கொலை கொலையாம் காரணமாம்
News
கொலை கொலையாம் காரணமாம்

கிரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பல பிரபலமான கொலை வழக்குகளும், அவற்றின் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதிமன்றங்களில் தினம் தினம் ஆயிரக்கணக்கான வழக்குகள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகம் முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் வழக்காக அது மாறினால்? மீடியாவிலும், மக்களிடமும் பேசுபொருளாய் ஒரு வழக்கு மாறும்போது, தினம் தினம் புதுத் தகவல்கள் வருவதும், சம்பந்தப்பட்டவர்களின் பின்னணி பற்றி ஆராயப்படுவதும், தீர்ப்பு நாளை நோக்கி எதிர்பார்ப்பு வருவதுமாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அல்லவா!

தமிழகம் முழுவதும் இப்படி அதிர்வலைகளை ஏற்படுத்திய 25 பிரபலமான வழக்குகளைப் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கும், கோமல் அன்பரசன் எழுதிய `கொலை கொலையாம் காரணமாம்’ மின்னிதழை வாசிக்கும்போது, இப்போதும் அதே பரபரப்பு நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

கிரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான பல பிரபலமான கொலை வழக்குகளும், அவற்றின் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

புகழின் உச்சத்தில் இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, இன்றும் பேசுபொருளாய் இருக்கும் ஆட்டோசங்கர் கொலை வழக்கு, சிங்கம்பட்டி ஜமீன் தன் ஆஸ்தியில் பாதிக்கும் மேல் இழக்கக் காரணமாக இருந்த வழக்கு, எம்.ஜி.ஆரைக் கொலை செய்ய முயன்ற வழக்கு, தடயவியல் துறையில் இன்றும் பாடமாகப் போற்றப்படும் ஆளவந்தார் கொலை வழக்கு இப்படி தமிழகத்தையே உலுக்கிய 25 வழக்குகள் பற்றி இந்த மின்னிதழில் அலசி ஆராயப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கொலை வழக்குகள் சுவாரசியமனதாக இருக்கும். ஆஷ் கொலை வழக்கு, மருது பாண்டியர் நகை வழக்கு, சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு, அன்னிபெசன்ட் வழக்கு என்று பழைய வழக்குகளையும் இந்த இ- புக் படம் பிடித்து காட்டியுள்ளது.

கோமல் அன்பரசன் எழுதிய கொலை கொலையாம் காரணமாம் இ-புக் முற்றிலும் இலவசமாக!

ஒவ்வொரு வழக்கும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் பின்னணி என்ன? எது அவரைக் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டியது? எப்படிப்பட்ட குற்றங்களில் அவர் ஈடுபட்டார்? அவருடைய வாழ்க்கைமுறை, பின்னணி என்ன? அவர் பிடிபட்டது எப்படி? பிறகு என்ன ஆனது? கிரிமினல்களைத் தண்டிப்பதன் மூலம் மட்டும் நீதி கிடைத்துவிடுமா? இவர்கள் உருவாகக் காரணமாக இருந்த சமூக அரசியல் சூழலை எப்படிச் சீர்திருத்துவது? இப்படி பல கேள்விகள் நம்மிடையை எழுவதையும் மறுக்கமுடியாது.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மிகப் பரந்த அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அன்றைய பத்திரிகைகளில் சுடச்சுட அலசப்பட்டவை. பொதுவெளியில் அச்சத்துடன் விவாதிக்கப்பட்டவை. அந்தக் காலகட்டத்தையும் அப்போதைய பரபரப்பையும் நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது இந்த மின்னிதழ்.

பல வழக்குகளில் குற்றவாளிகள் யாரென்றே இதுவரை தெரியாதது வேதனையையும் வியப்பையும் தான் தருகிறது. சரித்திரத்தின் ரத்தம் படிந்த பக்கங்களைப் புரட்டி பார்க்க மனோ தைரியத்துடன் உள்ளே செல்லுங்கள். இந்த இ-புக் உங்களை நிச்சயம் தூங்க விடாமல் செய்யும்.

இலவசமாக டவுன்லோடு செய்வது எப்படி?

கோமல் அன்பரசன் எழுதிய `கொலை கொலையாம் காரணமாம்’ புத்தகத்தை இப்போது இ-புக் வடிவில் உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம். இதற்காக, நீங்கள் செய்யவேண்டிய எளிதான வழிமுறைகள்:

உங்களது மொபைலில் Vikatan App-ஐ (Android only) டவுன்லோடு செய்து, ரெஜிஸ்டர் செய்தால் போதும், இந்த மின்னிதழை முழுமையாக வாசிக்கலாம்.

நீங்கள் டவுன்லோடு செய்யும் இந்த இ-புக் விகடன் App-ல் உள்ள Library-ன் EBook பகுதியில் சேவ் ஆகியிருக்கும். அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz