Published:Updated:

ஊட்டியாகிறதா சென்னை..? மழை, மேகமூட்டம், குளிர்... வானிலை முன்னறிவிப்பு!

சென்னையில் பனிமூட்டம் ( சொ.பாலசுப்ரமணியன் )

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையானது 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 22 - 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.

சென்னையின் வெப்பநிலை குறைந்து, குளிர் நிலவி வருவதால், இது சென்னையா, ஊட்டியா என்று மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

சென்னை மழை
சென்னை மழை

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நவம்பர் 21-ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அத்துடன் 22-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து காணப்பட்டது. மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளையொட்டி காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது.

இதனால் நவம்பர் 23, 24 ஆகிய தேதிகளில், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

25, 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை கோப்புப் படம்
மழை கோப்புப் படம்

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையானது 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது  22 - 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும்.

அதோடு மேகமூட்டம் 48 மணிநேரம் வரை காணப்படுவதோடு, ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது’’ என்று அறிவித்துள்ளது.