Published:Updated:

பாரெங்கும் பாரதி! நேரலையில் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
News
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

மகாகவி சுப்பிரமணிய பாரதி மறைந்து 100 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கலைஞன் மறைந்தாலும் கலை மறைவதில்லை. தன் உணர்ச்சிமிகு வரிகளால் இன்றும் நம் மனங்களில் உருவம் பெற்று நிற்கிறார் புரட்சிக் கவி!

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று பாடிய மகா கவியின் புகழையும் உலகம் அறிய வேண்டாமா? முண்டாசுக் கவியின் புகழ் பரப்பும் நற்பணியைக் கையில் எடுத்துள்ளது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை...

பாரதமெங்கும் பாரதி!

‘கங்கை நதிப் புறத்து கோதுமைப் பண்டம்,

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்,

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு,

சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்.’

என்று பாடிய தேசியப் புலவன் பாரதி. தேச ஒற்றுமையே பாரதியின் பேச்சும் மூச்சும். அவரின் கீர்த்தியை இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரப்ப ‘பாரதமெங்கும் பாரதி’ என்கிற பேச்சு & கலை நிகழ்ச்சிகளை, அந்தந்த ஊரின் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் கலை & பண்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து நடத்தி வருகிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை. இதுவரை விசாகப்பட்டினம், கோவா, சண்டிகர், லக்னோ என்று இந்தியாவின் பல இடங்களில் பாரதமெங்கும் பாரதி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

M. முரளி, தலைவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை
M. முரளி, தலைவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை

உலகம் முழுக்க ஒலிக்கும் பாரதியின் பெருமை!

இந்நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக உலகம் முழுக்கவுள்ள தமிழ்ச் சங்கங்கள் மற்றும் கலை மற்றும் பண்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து ‘பாரெங்கும் பாரதி’ என்கிற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்துள்ளது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை.

இதன் முதற்கட்டமாக, கடந்த வாரம் சிங்கப்பூரின் லிஷா இலக்கிய சங்கத்துடன் இணைந்து பாரெங்கும் பாரதி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியைத் தவற விடாதீர்கள்!

மகாகவியின் பிறந்தநாளான இன்று (11.12.2021), இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு, கனடிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாரெங்கும் பாரதி ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை Vikatan eMagazine ஃபேஸ்புக் பக்கத்திலும், Sri Krishna Sweets யூட்யூப் பக்கத்திலும் நேரலையில் காண முடியும்!

நிகழ்ச்சி நிரல்:

இரவு 8.00 மணி முதல்

பாரெங்கும் பாரதி நிகழ்ச்சி குறித்து பேச்சு,

M. முரளி, தலைவர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை

வரவேற்புரை,

சிவன் இளங்கோ, கனடிய தமிழர் பேரவை

சிறப்புரை,

சிவகுமார், பட்டிமன்ற பேச்சாளர்

கனடா நாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சி:

நடனம்: நிரோதினி பரராஜசிங்கம் மாணவர்கள் குழு

பாடல்: சின்மயி சிவகுமார்

வயலின்: ஸ்ருதி பாலமுரளி

இன்றைய நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார் K.R. நாகராஜன், தலைவர், ராம்ராஜ் காட்டன்.

கலைமாமணி சிக்கில் மாலா சந்திரசேகர், புல்லாங்குழல் கலைஞர், கலைமாமணி ஒ.எஸ். அருண், கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் கலைமாமணி சித்ரா கோபிநாத், நாட்டியாலயா பரதநாட்டியம் அகாடெமி, காரைக்கால், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

தொடர்ந்து ஆஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா என்று உலக நாடுகள் அனைத்திலும் பாரெங்கும் பாரதி நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்!

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை, YACD டிரஸ்ட் மற்றும் உலகளாவிய தமிழ் மற்றும் கலாச்சார பண்பாட்டு அமைப்புகள் இணைந்து நடத்தும் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் புகழ் பரப்பும் இந்தப் பொன்னான நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமைகொள்கிறது விகடன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz