Published:Updated:

பெப்சொடென்ட் 'சுத்தமான வாய், சுத்தமான பேச்சு!' போட்டி வெற்றியாளர்கள்

பெப்சொடென்ட்
News
பெப்சொடென்ட்

திருநெல்வேலியில் அபத்தமாக பேசுபவர்களை 'நல்லதப் பேசிப் பழகுலே' என்பார்கள். அதன் மறுவுருவாக்கமான பெப்சொடென்ட்டின் சுத்தமான வாய், சுத்தமான பேச்சு கார்ட்டூன் பகுதி எப்போதும் அமர்க்களம்!

ஆனந்த விகடனில், பெப்சொடென்ட் வழங்கும் 'சுத்தமான வாய், சுத்தமான பேச்சு' கார்ட்டூன் பகுதிக்கு அருமையான கான்செப்ட்டும், கார்ட்டூன் பகுதியில் வரும் குட்டிப் பையனுக்கு சூப்பரான பெயர் ஒன்றையும் எழுதி அனுப்புங்கள் என்று அறிவிப்பு வெளிவந்ததுதான் தாமதம்! மளமளவென வந்து குவிந்த ஆயிரக்கணக்கான வாசகர்களின் பதில்களால் நம் வாட்ஸ்-அப் வழிந்து நிரம்பியது. போட்டியில் வெற்றிபெற்று பரிசுகளைத் தட்டிச்சென்ற வாசகர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்டது இதுதான்...

மீண்டும் அழைத்த விகடன்! - சுந்தர ராஜ், திருநெல்வேலி.

சுந்தர ராஜ்
சுந்தர ராஜ்

"கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக ஆனந்த விகடன் படிச்சிட்டு வர்றேன்! விகடன் நடத்தும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பலமுறை பரிசுகள் வென்றிருக்கேன். பல வருடங்கள் கழித்து மீண்டும் விகடனில் இருந்து அழைப்பு, 'உங்களுடைய கார்ட்டூன் கான்செப்ட் செலக்ட் ஆகியிருக்கு'ன்னு கேட்டபோது எக்கச்சக்க சந்தோஷம்!"

"இதுவரை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன்ல நான் எழுதி அனுப்பிய 50-க்கும் மேற்பட்ட ஜோக்குகள் வெளிவந்துருக்கு. நல்ல சமூகக் கருத்துகளை எடுத்துச் சொல்லும் பெப்சொடென்ட்டின் சுத்தமான வாய் சுத்தமான பேச்சு கார்ட்டூன் பகுதிக்கு என்னால் ஆன பங்களிப்பைக் கொடுக்க முடிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி!"

ரூ. 3000/- மதிப்பிலான கிஃப்ட் வவுச்சர் வென்றுள்ள சுந்தர ராஜ்-க்கு வாழ்த்துகள்! அவர் வழங்கிய கார்ட்டூன் கான்செப்ட் கீழே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெப்சொடென்ட் 'சுத்தமான வாய், சுத்தமான பேச்சு!' போட்டி வெற்றியாளர்கள்

என்னை எழுத்தாளனாக மாற்றிய விகடன்! - எம். ராஜா, விழுப்புரம்.

எம். ராஜா
எம். ராஜா

"விகடனுக்கும் எனக்குமான பிணைப்பு ரொம்ப விசேஷமானது. 35 வருடங்களாய் ஆனந்த விகடனை வாசித்து வருகிறேன். கடைகளில் கிடைக்கவில்லை என்றால்கூட பக்கத்து நூலகத்துக்குச் சென்று விகடன் படித்துவிடுவேன். ம. விருதுராஜா என்ற பெயரில் பலமுறை என் ஜோக்குகள் விகடனில் வந்துள்ளன."

"வெறும் வாசகனாக இருந்த என்னை ஆனந்த விகடனின் முத்திரைக் கதைகள் பெரிதும் பாதித்து, என்னை எழுதத் தூண்டின. 'அர்த்தமுள்ள ஆரம்பம்' என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டுள்ளேன். பத்தாவது வரை மட்டுமே படித்த என்னை, எழுத்தாளன் ஆக்கிய பெருமை விகடனையே சேரும்!"

"எளிமையாய் எல்லோருக்கும் புரியும்படி, முக்கியமான விஷயங்களை பேசிச் செல்வது பெப்சொடென்ட் வழங்கும் 'சுத்தமான வாய், சுத்தமான பேச்சு' கார்ட்டூன் பகுதியின் ஹைலைட்! அதில் என்னுடைய கான்செப்ட்டும் வந்திருப்பது மிகப்பெரும் பெருமையும் மகிழ்ச்சியும்!"

ரூ. 3000/- மதிப்பிலான கிஃப்ட் வவுச்சர் வென்றுள்ள எம். ராஜா-வுக்கு வாழ்த்துகள்! அவர் வழங்கிய கார்ட்டூன் கான்செப்ட் கீழே...

பெப்சொடென்ட் 'சுத்தமான வாய், சுத்தமான பேச்சு!' போட்டி வெற்றியாளர்கள்

சொல்வனத்தில் விட்டதை இதில் பிடிச்சுட்டேன்! - காளிராஜ், சென்னை.

காளிராஜ்
காளிராஜ்

"9 வயதிலிருந்து ஆனந்த விகடன் படிக்கிறேன்! 35 ஆண்டுகளாய் என்னுடைய விருப்பமான வார இதழ் என்றால் விகடன்தான்! சினிமா செய்திகள் என்றால் தேடிப் பிடித்து வாசிக்கும் என்னை, கதைகள், பல்சுவை கட்டுரைகள் என்று வேறொரு தளத்துக்கு உயர்த்தியது விகடன். சுஜாதாவின் எழுத்து என்றால் உயிர்! 1999-முதல் அதிதீவிர வாசகனாக மாறிப் போனேன். "

"பலமுறை கவிதை எழுதி அனுப்பிவிட்டு, சொல்வனத்தில் என் கவிதை வராதபோதெல்லாம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். கடந்த வார ஆ.வி.-யில் பெப்சொடென்ட்டின் 'சுத்தமான வாய், சுத்தமான பேச்சு' கார்ட்டூன் பகுதியில் என் பெயர் வந்ததும் அருவி போல கொட்டிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! என் வீட்டில் எல்லாருமே விகடன் வாசகர்கள், அனைவரிடமும் விகடனில் பெயர் வந்ததைக் காட்டி பரவசமடைந்தேன்."

"நான் ஒரு காமிக்ஸ் விரும்பி. அதனால் விகடன் வாங்கியதும் சுத்தமான வாய், சுத்தமான பேச்சு பகுதி கார்ட்டூன்களை முதலில் படித்துவிடுவேன். என் பூர்வீகம் திருநெல்வேலியில் அபத்தமாக பேசுபவர்களை 'நல்லதப் பேசிப் பழகுலே' என்பார்கள். அதன் மறுவுருவாக்கமான பெப்சொடென்ட்டின் சுத்தமான வாய், சுத்தமான பேச்சு கார்ட்டூன் பகுதி எப்போதும் அமர்க்களம்!"

பெப்சொடென்ட் பையனுக்கு பெயர் வைக்கும் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்: 'ஜெர்மி செக்கர்'. பரிசு: ரூ. 4000/- மதிப்பிலான கிஃப்ட் வவுச்சர். வாழ்த்துகள் காளிராஜ்!