Published:Updated:

ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வரம்பு அதிகரிப்பு; ஒரு மாதத்துக்கு எத்தனை டிக்கெட்கள் தெரியுமா?

IRCTC இணையதளம்

மக்களிடையே ஐ.ஆர். சி.டி.சி - யில் ஆன்லைன் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவை அதிகரித்துள்ளது, இந்திய ரயில்வே.

ரயில்களில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கான வரம்பை அதிகரிப்பதாக இந்திய ரயில்வே துறை இன்று அறிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதள பக்கம் அல்லது செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. முன்பதிவு செய்வோரின் பயனரின் ஐடி, ஆதார் எண்ணோடு இணைக்கப்படாத பட்சத்தில் அவரால் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும். தற்போது இந்த எண்ணிக்கையை 6-லிருந்து 12 ஆக உயர்த்தி உள்ளது ரயில்வே துறை.

IRCTC Rail Connect
IRCTC Rail Connect

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல், பயனரின் ஐடி ஆதார் எண்ணோடு இணைக்கபட்டிருக்கும் பட்சத்தில், அவரால் 12 டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்ய முடியும். தற்போது இந்த எண்ணிக்கையை 24 டிக்கெட்கள் வரை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஒருவர் முன்பதிவு செய்யும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவரை ஆதார் மூலம் சரிபார்த்து கொள்கிறது.

மக்களிடையே ஐ.ஆர். சி.டி.சி - யில் ஆன்லைன் ரயில் டிக்கெட்டை பதிவு செய்யும் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவை அதிகரித்துள்ளது, இந்திய ரயில்வே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism