பிறக்கும் புத்தாண்டை விருதுகளோடு வரவேற்பதுதான் விகடன் வழக்கம். தொடர்ந்து 13வது ஆண்டாக சினிமா, கலை, இலக்கியம், சமூகம் எனப் பலப் பிரிவுகளில் திறமைக்கு மரியாதையளித்து விருதுகளை வழங்கவிருக்கிறது ஆனந்த விகடன்.
2020-ம் ஆண்டின் முதல் நிகழ்வாக, மிக பிரமாண்டமாக, திரையுலக ஆளுமைகளின் முன்னிலையில் `ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா' ஜனவரி 11-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த ஆண்டில் இன்னும் ஒரு சிறப்பாக, ‘திறமைக்கு மரியாதை’ அளிக்கும் நிகழ்வில் ‘வாசகர்களுக்கு மரியாதை’ அளிக்க விரும்புகிறான் விகடன். ஆனந்த விகடன் சினிமா விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலுக்குத் தேர்வாகியிருப்பவர்களின் பெயர்ப் பட்டியலை அடுத்தடுத்த பக்கங்களில் கொடுத்திருக்கிறோம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபட்டியலில் இருப்பவர்களில் ஆனந்த விகடன் விருதை யார் வெல்வார்கள் என்பதை வாசகர்களாகிய நீங்கள் கணிக்க வேண்டும். இதை உங்களுக்கு சவாலாக விடுக்கிறான் விகடன். இங்கே இடம்பெற்றிருக்கும் QR -கோடை ஸ்கேன் செய்தால் ஆனந்த விகடனின் சினிமா விருதுகள் இணையதளப் பக்கம் திறக்கும். அதில் ஒவ்வொரு விருதுக்குமான விகடன் வெற்றியாளரைக் கணித்து உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். விகடன் விமர்சனக் குழு விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கும் வெற்றியாளர்களைச் சரியாகக் கணிக்கும் வாசகர்களுக்கு, விழாவில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பும் மேலும் ஓர் ஆச்சரியமும் காத்திருக்கிறது.

ஜனவரி 11 அன்று வெற்றிபெறும் வாசகர்களைச் சந்திக்கக் காத்திருக்கிறான் விகடன்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போட்டி நிபந்தனைகள்:
பரிந்துரைப் பட்டியல், படங்கள் வெளியான காலத்தை வைத்து வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
டிசம்பர் 20 வரை வெளியான படங்களில் இருந்து பரிந்துரைக்குத் தேர்வானவை மட்டும் இங்கே. டிசம்பர் 31-க்குள் வெளியாகும் படங்களில் விருது பரிசீலனைக்கு ஏற்றவை, விகடன் இணையதளத்தில் அப்டேட் செய்யப்படும்.
இந்தப் போட்டி vikatan.com தளத்தில் மட்டுமே நடைபெறும்.
வாக்களிப்பதுடன் ` எப்படி இருந்தது , தமிழ் சினிமா 2019' - உங்கள் பஞ்ச்லைனையும் மூன்று வார்த்தைகளில் சொல்லவும்.
வெற்றியாளர்களுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதற்கான போக்குவரத்து மற்றும் தங்கும் செலவுகளுக்கு விகடன் பொறுப்பேற்காது.
போட்டி தொடர்பாக விகடன் விமர்சனக் குழுவின் தீர்ப்பே இறுதியானது!
