Published:Updated:

ரூ.2,000 கோடிக்கு தமிழக அரசு வெளியிடும் பிணையப் பத்திரங்களை சிறு முதலீட்டாளர்களும் வாங்கலாம்!

தமிழக அரசு

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.

ரூ.2,000 கோடிக்கு தமிழக அரசு வெளியிடும் பிணையப் பத்திரங்களை சிறு முதலீட்டாளர்களும் வாங்கலாம்!

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுக்கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.

Published:Updated:
தமிழக அரசு

தமிழக அரசு ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுக்காலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகத் தமிழ்நாடு நிதித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகாலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது.

ரிசர்வ் பேங்க் - மும்பை
ரிசர்வ் பேங்க் - மும்பை

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் நவம்பர் 07, 2022 அன்று நடத்தப்படும்.

போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கிச் சேவை (Loomulo [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணுப் படிவத்தில் (Electronic format) நவம்பர் 07, 2022 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் சிறு முதலீட்டாளர்களும் கலந்துகொண்டு முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000 ஆகும்.

தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் பிணையப் பத்திரங்கள் வெளியிடுவதன்மூலம் ரூ.9,523 கோடியைத் திரட்டவுள்ளன!

கூடுதல் விவரங்களுக்கு சிறு முதலீட்டாளர்கள் இந்த லிங்க்கை க்ளிக் செய்யலாம்: https://rbiretaildirect.org.in/#/