Published:Updated:

இரவு 3 மணிவரை டெலிவரி... ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் புதிய திட்டம்!

மளிகைப் பொருள் டெலிவரி! - ஸ்விக்கி

ஸ்விக்கி இன்ஸ்டமார்ட் (Swiggy Instamart) தனது சேவையை நள்ளிரவு 3 மணி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களால் 5,000-க்கும் மேற்பட்ட பொருள்கள் வரை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பெற வழிவகை செய்யப்படும்'' என ஸ்விக்கி அறிவித்துள்ளது.

ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்குவது மட்டுமல்லாமல், மளிகைப் பொருள்களையும் மக்கள் அதிகமாக ஆர்டர் செய்கின்றனர். பல ஆன்லைன் தளங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க அதிவிரைவு டெலிவரி, ஆஃபர்களை வெளியிடுகின்றன.

Swiggy
Swiggy

இந்நிலையில் லேட் நைட் டெலிவரி என்பது சமீபத்திய பேஷனாக உள்ளது. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் லேட் நைட் டெலிவரியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன.

அதைத் தொடர்ந்து மளிகைப் பொருள்களை விநியோகித்து வரும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) தனது சேவையை நள்ளிரவு 3 மணி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 25 நகரங்களுக்கும் மேல் செயல்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இத்தளத்தில் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.

 SWIGGY
SWIGGY

``வாடிக்கையாளர்கள் கோரிக்கையின் அடிப்படையில், ஸ்டோர் உரிமையாளர்கள் மற்றும் டெலிவரி பார்ட்னர்களின் உதவியுடன், சில நகரங்களில் எங்களின் செயல்படும் நேரத்தை நீட்டிக்கிறோம். வாடிக்கையாளர்களால் 5,000-க்கும் மேற்பட்ட பொருள்கள் வரை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பெற வழிவகை செய்யப்படும்'' என ஸ்விக்கி அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக சென்னை, பெங்களூர் முதலிய முக்கிய நகரங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.