Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

குற்றாலம் குற்றாலீஸ்வரர் கோயிலில் ஸ்வாமிக்குத் தினமும் இரவில் கஷாயம் நிவேதிக்கப்படுவதாகப் படித்தறிந்தேன்.

உதவலாம் வாருங்கள்!

குற்றாலம் குற்றாலீஸ்வரர் கோயிலில் ஸ்வாமிக்குத் தினமும் இரவில் கஷாயம் நிவேதிக்கப்படுவதாகப் படித்தறிந்தேன்.

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

அன்பார்ந்த வாசகர்களே...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உலக உயிர்கள் உய்வடையும் பொருட்டு சிவபெருமான் ஐந்தொழில்களைச் செய்கிறார். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து மந்திரங்கள் - அம்சங்கள் நிறைந்தது சிவபெருமானின் திருமேனி என்று மிருகேந்திர ஆகமம் கூறுகிறது எனும் தகவலைப் படித்திருக்கிறேன். இந்த ஆகம நூல் எங்கு கிடைக்கும். விவரம் பகிருங்களேன்.

- பி.மணிகண்டன், நாகர்கோவில்

உதவலாம் வாருங்கள்!

பெற்றோரின் திதிநாள்களிலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை மஹாளய அமாவாசை போன்ற தினங்களிலும் அருகில் உள்ள முறப்பநாடு அல்லது கருங்குளம் அமைந்திருக்கும் தாமிரபரணி நதி தீரத்தில் நீராடி, திதி-தர்ப்பணம் செய்வது வழக்கம்.

சமீப காலங்களில் பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த இடங்களுக்குச் செல்ல முடியாத சூழல். வீட்டிலேயே எள்ளும் தண்ணீரும் இறைத்து முன்னோர் ஆராதனை செய்கிறேன். அதில் பூரணத் திருப்தி இல்லை. ஆகவே, அந்த நேரத்தில் சொல்லவேண்டிய மந்திரங்கள் செய்ய வேண்டிய நியதிகள் குறித்த விளக்கங்கள் (தமிழில்) அடங்கிய புத்தகம் ஏதேனும் உண்டா. இதுபற்றிய விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- பரமசிவன், திருநெல்வேலி

கேரளத்தில் ஏதோவொரு கோயிலில் அம்மனுக்குத் தவிடு அபிஷேகம் செய்து வழிபடுவதாகவும், இந்த வழிபாட்டின் மூலம் தீராத நோய்களும் தீரும் என்றும் அறிந்தேன். அது எந்தக் கோயில், கேரளத்தில் எங்குள்ளது, எப்படிச் செல்வது போன்ற விவரங்கள் அறிந்த அன்பர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- வி.கோவிந்தன், ராதாபுரம்

பெருமாள் கோயில்களில் சடாரி வைத்து தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதேபோல், கும்பகோணம் அருகில் சிவாலயம் ஒன்றிலும் சடாரி சாத்தும் வழக்கம் உண்டு என்பதாக அறிந்தேன். அது எந்தத் தலம். அங்கு சடாரி வழக்கம் வந்தது எப்படி? விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- உமா, கன்னியாகுமரி

குற்றாலம் குற்றாலீஸ்வரர் கோயிலில் ஸ்வாமிக்குத் தினமும் இரவில் கஷாயம் நிவேதிக்கப்படுவதாகப் படித்தறிந்தேன். இதேபோன்று விசேஷ வழிபாடுகள் நிகழும் தலங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறேன். அவ்வகையில் சிவாலயம் ஒன்றில் இறைவனுக்கு வெந்நீர் அபிஷேகம் நிகழ்வதாக அறிந்தேன். அந்தக் கோயில் எந்த ஊரில் உள்ளது?

- ஈ.வெங்கட், கும்பகோணம்

`ஸ்ரீராமனை வணங்குகிறேன்’

சக்தி விகடன் 22.2.22 தேதியிட்ட இதழில் `சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கவல்ல அற்புதமான துதிப்பாடல் ஸ்ரீராமபுஜங்க அஷ்டகம். இந்தப் பாடலின் சில வரிகள் மட்டுமே நினைவில் உள்ளன. இந்த அஷ்டகம் முழுமையாக பொருள் விளக்கத்துடன் தேவை’ என்று மதுரை வாசகர் கே.வெங்கடேஷ் கேட்டிருந்தார். அவருக்காக, குறிப்பிட்ட துதிப்பாடலை நகல் எடுத்து அனுப்பியுள்ளதுடன், கீழ்க்காணும் விவரத்தையும் சென்னை வாசகி புவனேஸ்வரி பகிர்ந்துள்ளார்.

`வியாசமகரிஷி ஸ்ரீராமபிரானை புஜங்க விருத்தத்தால் செய்த ஸ்தோத்திரம் இது. மிகுந்த அழகு வாய்ந்தவரும் எல்லா பாவங்களையும் போக்குகின்றவரும் பக்தர்களுக்கு மனம் களிப்படையும் விதம் அருள்பவருமான இணையற்ற ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்’ என்று தொடங்கி ராமபிரானைப் போற்றுகிறது இந்த ஸ்தோத்திரம்.

இதைப் படிப்பதால் வித்யை, ஐஸ்வர்யம், செளக்கியம், புத்ரலாபம், கீர்த்தி, ஆயுள் முதலான சகலமும் வரமாகக் கிடைக்கும். ஜாதகத்தில் புதன், சனி, ராகு, கேது, சந்திரன், சுக்ரன் தோஷம் உள்ளவர்கள் இதைப் படிப்பதால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது பெரியோர் வாக்கு.’

ஸ்ரீராம புஜங்காஷ்டகத்தின் ஒரு துதிப்பாடல் இங்கே...

நிஜஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்

ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹராமமத்வயம்

கருத்து: ஆத்ம ஸ்வருபத்தை உபதெசிப்பவரும், கருணைக் கடலும், ஜனன-மரண பயத்தைப் போக்குபவரும், எங்கும் சமமாக இருப்பவரும், மங்கலம் அருள்பவரும், தோஷமற்றவரும் இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்ன-600 002 Email: sakthi@vikatan.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism