Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள்.

அன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
உதவலாம் வாருங்கள்

னக்குத் திருவாரூர், கும்பகோணம் மற்றும் தஞ்சை பகுதிகளில் உள்ள திருக்கோயில்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். அதுகுறித்த நூல்கள் அல்லது விரிவான தகவல்கள் எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்துகொண்டு உதவுங்களேன்.

- ஆனந்த் வே.ராமன், சென்னை -20.

முத்தாரம்மன் எங்கள் குலதெய்வம். இந்த அம்மனின் சரிதத்தைச் சொல்லும் வில்லிசைப் பாடலைச் சிறுவயதில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். தற்போது `ஶ்ரீமுத்தாரம்மன் சரிதம் - வில்லிசைப் பாட்டு' புத்தக வடிவிலோ அல்லது சி.டி வடிவிலே எங்கு கிடைக்கும் என்று அறிய விரும்புகிறேன். தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- கே.ராமநாதன், செங்கோட்டை

முக லிங்கங்கள் குறித்து படித்து வருகிறேன். சிவ வடிவங்களில் பிரதானமான வடிவம் இது என்பார்கள். இதுகுறித்து விளக்கமான தகவல்கள் எங்கு கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் வழிகாட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.

- கோ.லட்சுமணன், காரைக்குடி

ப்ரசன்ன ஜோதிடம் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி வருகிறேன். இது தொடர்பான நூல்கள் வாசகர்கள் எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங் களேன். மேலும் ப்ரசன்ன ஜோதிடத்தில் தேர்ந்த ஜோதிடர்களின் தொடர்பு விவரத்தை அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- எஸ். சோமசுந்தரம், திருநெல்வேலி-2

வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட விரும்புகிறோம். அது எங்கு கிடைக்கும். தகவல் பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

- எம்.கீதா, கடலூர்

`திரிபுரஸூந்தரி வேதபாத ஸ்தோத்திரம்' ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தின் (தமிழில்) விளக்கத்துடன் கூடிய புத்தகம் தேவை. அதேபோல், வன மகோத்ஸவம்' எனும் பழைமை வாய்ந்த புத்தகமும் வேண்டும். இவை எங்கு கிடைக்கும்? தெரிந்த அன்பர்கள் தகவல் தாருங்களேன்!

- ஆர்.வேல்முருகன், சென்னை-4

முருகனின் திருத்தலங்களில் பிரசித்திபெற்ற பழமுதிர்ச்சோலை குறித்த விவரங்கள் எனக்குத் தேவை. இந்தத் தலம் குறித்த புராண நூல்கள், திருத்தலப் பெருமையைச் சொல்லும் புத்தகங்கள் இருந்தால் தந்து உதவுங்களேன்.

- கே.வாசுகி, கோவை-3

ஶ்ரீரமண மகரிஷியின் ஆன்மிக விளக்கம், அறிவுரைகள், தத்துவங்கள் என எல்லாவற்றையும் சேர்த்து, மகரிஷி அறிவுரைப்படி உரிய திருத்தங்கள் செய்து தொகுத்துத் தந்த அருளாளர் முருகனார்.

‘குருவாசகக் கோவை’ எனும் இந்த நூலில் இருக்கும் 28 வெண்பாக்கள் ரமண மகரிஷியால் இயற்றப்பட்ட அமுதம் போன்ற பொக்கிஷங்கள் என்பர். எனக்கு இந்த நூலும், அருளாளராகிய முருகனாரின் சரிதம் குறித்த விவரங்களும் தேவை. விவரமறிந்தவர்கள் பகிருங்களேன்.

- கே.ஆனந்தன், துறையூர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதவிக் கரம் நீட்டியோர்...

`அறப்பளீசுர சதகம்' எனும் நூல் குறித்த விவரங்களை திருநெல்வேலி வாசகர் கோ.ராமநாதன் கேட்டிருந்தார். அவர் பொருட்டு, சென்னை வண்ணாரப்பேட்டை வாசகர் சந்த்ர மெளலி கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார்.

அம்பலவாணக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்ட மிக அற்புதமான இந்த நூல் சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டது.

அண்ணன், தாய்-தந்தை, இஷ்ட தெய்வம், குரு, உறவு, பிள்ளை - முதலான உறவுகளை (அதன் வழிமுறைகளை) மறுத்து, வேறோர் அற்புதமான விளக்கத்தைத் தரும் நூல் இது.

வாய் வார்த்தைகளாக இல்லாமல் செயலாற்றுபவர் யாரோ, அவர்களை உறவு என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்கிறது. நமக்கெல்லாம் தெரிந்த உறவுகளைச் சொல்லி, இந்த உறவுகள் வீட்டுக்குள் மட்டுமல்ல, வெளி உலகத்திலும் இருக்கின்றன; அவற்றை உணர்ந்து கொள் என்று வழிகாட்டுகிறது இந்த நூல். அதேபோல் இஷ்ட தெய்வம் யார் என்பதையும் விளக்குகிறது.

`பகைவர்கள் செய்யும் கொடுமைகளால் நாம் நொந்து - நைந்து - மெலிந்து போகும்போது, நமக்கு உதவி செய்பவர் எவரோ, அவரே இஷ்ட தெய்வமாம்!

தெய்வத்தைச் சொன்ன பாடல், அந்தத் தெய்வத்தை நமக்கு உணர்த்தும் குருவை, அடுத்ததாக அறிமுகம் செய்கிறது. அதிலும் ஒரு புதுமை; தெளிவு!

வெறும் மந்திர உபதேசம் செய்பவர் மட்டும் குரு அல்ல; நல்ல யோசனைகளைச் சொல்லிக்கொடுத்து, `அப்பனே... உன் வாழ்வில் இது இது, இப்படி இப்படி நடக்கப் போகிறது. அதனால்தான் உனக்கு யோசனைகள் சொன்னேன்' என்று எதிர்காலத் துக்கும் சேர்த்து நல்வழி காட்டுபவரே குரு என்கிறது `அறப்பளீசுர சதகம்’

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com