Published:Updated:

உதவலாம் வாருங்கள்...

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம்.

உதவலாம் வாருங்கள்...

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம்.

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

அன்பார்ந்த வாசகர்களே...

ங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம் வாருங்கள்...

ங்கள் குலதெய்வம் வீரமனோகரி அம்மன் என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் மூதாதையரின் பூர்வீகம் தூத்துக்குடி. அந்தப் பகுதியில் வீரமனோகரி என்ற பெயரில் அம்மன் கோயில் கொண்டிருக்கும் ஊர் பற்றிய விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன். குடும்பத்துடன் நேரில் சென்று வழிபட ஆர்வமாக உள்ளோம்.

- கே.முத்துமாலை, சென்னை-55

னுதினமும் பதிவிரதையர் ஐவரையும் தியானித்து வழிபட வேண்டும் என்று ஆன்மிகச் சொற்பொழிவில் சாது ஒருவர் விளக்கினார். அவர்களை வழிபடவேண்டிய சுலோகத்தையும் சொன்னார்.

அந்தச் சுலோகம் எனக்கு மறந்துவிட்டது. குறிப்பிட்ட சுலோகம் இருந்தால் அனுப்பிவையுங்களேன்.

- கோ.ராஜலட்சுமி, மேட்டுப்பாளையம்

ழை வேண்டி வருண ஜபம் செய்வதுபோன்று, அதீத மழைக் காலத்தில் குறிப்பிட்ட வழிபாடுகள் செய்தால் மழையின் பாதிப்பு தீரும் என்றும், `கடலிலும் காடுகளில் மழை பொழியட்டும் வசிப்பி டங்களில் மழை போதும்’ என வேண்டுவதாக ஒரு சுலோகம் உண்டு என்றும் படித்ததாக ஞாபகம். எவருக்கேனும் இதுபற்றிய விவரங்கள் தெரியுமா?

- வே.சீனிவாசன், மேலூர்

ந்தசஷ்டிக் கவசம் போன்று சிவ கவசம் ஒன்று உண்டு. சிறு வயதியில் பிரதோஷ வழிபாட்டின்போது, வழிபாட்டுக் குழுவோடு சேர்ந்து பாடியுள்ளோம். சிவபெருமானின் பஞ்ச முகங்களின் மகிமையையும் சொல்லும் கவசப் பாடல் அது.

`மறைபுகழ் வாம தேவன் வடதிசை காக்க’ என்ற வரி மட்டும் நினைவில் உள்ளது. இந்தக் கவசப் பாடல் எந்த நூலில் உள்ளது. அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

- எம்.சோமசுந்தரம், வள்ளியூர்

மிழகத்தில் அருள்மிகு தன்வந்திரி பகவானுக்குத் தனிக்கோயில் உண்டா. அல்லது அவர் தனிச் சந்நிதிகளில் அருள்புரியும் தலங்களின் விவரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

மேலும், தன்வந்திரி பகவானை எந்தக் கிழமைகளில் வழிபடலாம், வழிபாட்டு சுலோகங்கள் ஆகியவை பற்றிய விளக்கங்களையும் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கோ.சுதர்சனன் பெருமாள், கோவில்பட்டி

திருக்கோயில் ஒன்றில் வேண்டுதல் நிமித்தம் நந்தியெம்பெருமான் சிலையைத் திருப்பி வைத்து வழிபடும் வழக்கம் உண்டு என்று அறிந்தேன். அது எந்தக் கோயில், எந்த ஊரில் உள்ளது. இதுபோல், நந்திதேவர் விசேஷ வழிபாடுகள் தரிசனம் குறித்து வேறு தகவல்கள் இருந்தாலும் பகிருங்களேன்.

-க.வேல்முருகன், குளக்குடி

`வந்தேஹம் ஜகதோமூலகந்தம்

கந்தர்பசாஸனம்

கட்வாங்கினம் கட்ககேடதரம்

ஹேதிகராம்புஜம்

கங்காதரம் கரகளம்

கண்டாகர்ண ஸமர்சிதம்

டங்க ஹஸ்தம் டாதிமந்த்ரவேத்யம்

வைத்யம் மஹாருஜாம்'


இந்த ஸ்தோத்திரப் பாடல் எந்த நூலில் உள்ளது. இதற்கான விளக்கம் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று சேலம் வாசகர் கலைச்செல்வன் தொலைபேசி மூலம் கேட்டிருந்தார்.

மேற்காணும் ஸ்லோக வரிகள் ஜம்புநாத ஸ்தோத் திரத்தில் உள்ளவை. கெளதம முனிவரால் அருளப் பட்டது. பத்ம புராணத்தில் கஜாரண்ய மகாத்மியத்தில் உள்ளது. மொத்தமுள்ள 10 ஸ்தோத்திரங்களில் இரண்டு இங்கு உள்ளவை.

இதைப் படிப்பதால் பிணிகள் விலகும். தம்பதியருக்கு இடையே பிணக்குகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். சகல வித்தைகளும் ஸித்திக்கும். இனி, மேற்காணும் வரிகளுக்கான கருத்தை அறிவோம்.

உலகுக்குக் காரணமான வேரைப் போன்று இருப்பவரும், மன்மதனை அடக்கியவரும், அஸ்திர விசேஷத்தைக் கையில் ஏந்தியவரும், கத்தி, கேடயம் ஆயுதம் ஆகியவற்றைத் தரித்தவருமான ஜம்புநாதரை வணங்குகிறேன்.

கங்கையைத் தரித்தவரும் விஷத்தைக் கழுத்தில் தரித்தவரும், கண்டாகர்ணனால் பூஜிக்கப்பட்டவரும், கங்கம் எனும் ஆயுதத்தைத் தரித்தவரும், மந்திரத்தால் அறியத் தகுந்தவரும், சிறந்த வைத்தியருமான ஜம்பு நாதரை வணங்குகிறேன்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை சென்ன-600 002 Email: sakthi@vikatan.com