Published:Updated:

உதவலாம் வாருங்கள்...

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம்.

அன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

உதவலாம் வாருங்கள்...

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம் வாருங்கள்...

வீட்டில் ஸ்படிக லிங்கம் வைத்து பூஜிக்க விரும்புகிறேன். பழுதில்லாத ஸ்படிக லிங்க மூர்த்தங்களை எங்கு வாங்கலாம்; கிடைக்கும் முகவரிகள் தெரிந்தால் பகிருங்களேன்.

- சி.ராமநாதன், மதுரை-3

ங்கள் குலதெய்வம் வண்டிமறிச்சி அம்மன். தெற்கு மாவட்டங்களில் இந்த அம்மன் வழிபாடு பிரசித்திபெற்றது. வண்டிமறிச்சி அம்மன் குறித்த திருக்கதையை கொஞ்சம் அறிவேன். விரிவான கதை விளக்கம் தேவை.

வில்லுப்பாடல்கள் அல்லது கதைத் தொகுப்புகள் ஏதேனும் உள்ளனவா. எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- தி.ஹரிஹரன், சென்னை-112

எனக்கு வலம்புரிச் சங்கு, வில்வக் கனிகளில் சதைப் பற்றி அகற்றிச் செய்யப்பட்ட விபூதிக் கொப்பரைகள், ஏகமுக ருத்ராட்சம் ஆகியவை தேவைப்படுகின்றன. இவை கிடைக்கும் இடம் குறித்தத் தகவல் அறிந்தவர்கள் வழிகாட்டினால் உதவியாக இருக்கும்.

- மு.பரமசிவன், தென்காசி

கனகதாரா ஸ்தோத்திரம், சூக்தம் போன்று மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்கான வேறு துதிநூல்கள் ஏதேனும் உள்ளனவா. மகாலட்சுமி துதிப்பாடல் தொகுப்பாகத் திகழும் புத்தகங்கள் கிடைக்கும் எனில், விவரம் பகிருங்களேன்.

- கே.கலைவாணி, துறையூர்

உதவலாம் வாருங்கள்...

உதவிக்கரம் நீட்டியோர்...

`எங்கள் குலதெய்வம் வீரமனோகரி அம்மன். தூத்துக்குடி பகுதியில் இந்த அம்மனுக்கான ஆலயம் இருக்கும் ஊர் பற்றிய விவரம் தேவை' என்று சென்னை வாசகர் முத்துமாலை கேட்டிருந்தார். அவருக்கு, `தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் வீரமனோகரி அம்மன் திருக்கோயில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து பஸ் வசதி உண்டு' என்று தகவல் பகிர்ந்துள்ளார், குலசேகரன்பட்டினம் வாசகர் வீ.செந்தில் ஆறுமுகம்.

`சிவகவசம் துதிப்பாடல் வரிகள் தேவை' என்று வள்ளியூர் வாசகர் எம்.சோமசுந்தரம் கேட்டிருந்தார். அவருக் குக் கீழ்க்காணும் விவரத்தை சென்னை வாசகர் கி.முருகன் பகிர்ந்துள்ளார்:

‘பிரம்மோத்தர காண்டம்’ எனும் நூலில் ‘சிவ கவசம்’ 21 பாடல்க ளாக அமைந்துள்ளது. இடப யோகீஸ்வரர் என்ற யோகி, பத்திராயு என்னும் மன்னருக்கு உபதேசித்த இந்தக் கவசம் அற்புதமானது.

பாடல்களின் முடிவில், ‘காக்க’ என்ற சொல்லைக் கையாளும் போது, ‘மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளில் காக்க; விரைபுனல் அதனுள் வீழ்ந்து விரிந்திடாது எம்மைக் காக்க’ என்றெல் லாம் வேண்டி நிறைவுபெறுகிறது. சிவனாரின் பஞ்ச முகங்களையும் இந்தக் கவசம் பாடுகிறது:

`ஆய தற்புருடன் எம்மைக் குணதிசை அதனில் காக்க

ஆன்வரும் அகோரமூர்த்தி தென்திசை அதனில் காக்க

தவளமாமேனிச் சத்யோசாதன் மேல் திசையில் காக்க

மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனில் காக்க

எங்கள் ஈசானதேவன் இருவிசும்பு எங்கும் காக்க...'

இப்படித் திகழும் இந்நூலின் நிறைவில் ‘பலச்ருதி’ சொல்லப்பட்டிருக்கிறது.

‘பஞ்ச பாதகங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்

அஞ்சலின் மறலியும் அஞ்சி ஆட்செயும்

வஞ்ச நோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்

தஞ்சம் என்று இதனை நீ தரித்தல் வேண்டுமால்..!’

- என பலனையும் சொல்லி நிறைவு பெறுகிறது இக்கவசம்.

மூல நூலில் உள்ள ‘சிவகவச’ பாடல்களை முழுமை யாகத் தந்து, அந்தப் பாடல்களுக்கு ஓர் அருமையான உரையை தமிழறிஞரான வடக்குப்பட்டு த.சுப்ரமணிய பிள்ளை என்பவர் எழுதியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன்,

757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com