திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்...

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உதவிக் கரம் நீட்டியோர்...

ந்திதேவரின் திருமணத்தைச் சிறப்பிக்கும் ஏழூர் பற்றிய தகவல் அறிந்திருக்கிறேன். `நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்' என்ற சொல்வழக்கோடு அவ்வூர்கள் பற்றிய தகவல்களை அடியார் ஒருவர் பகிர்ந்துகொண்டார். எனக்கு அந்தத் தலங்களை தரிசிக்க ஆசை.
உதவலாம் வாருங்கள்...

ந்த ஏழு தலங்களின் தல வரலாறு, வழிபாட்டு மகிமைகள், திருவிழா சிறப்புகள், தலங்களின் அமைவிடம், செல்லும் வழி ஆகியவற்றை விவரிக்கும் தனிப் புத்தகம் எங்கு கிடைக்கும். எவரிடமேனும் இருந்தால் நகலெடுத்து அனுப்புங்களேன். அல்லது குறிப்பிட்ட புத்தகம் கிடைக்கும் முகவரியைச் சொன்னா லும் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.அருணன், தூத்துக்குடி

உதவலாம் வாருங்கள்...

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள இலம்பயம்கோட்டூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஈஸ்வரனை அரம்பையர்கள் வழிபட்டதாக ஒரு கதை படித்தேன். அரம்பையர் என்போர் தேவ கணங்களில் ஒரு கூட்டமா? ரம்பா, ஊர்வசி போன்ற தேவ மாதர்களா?

இந்த அரம்பையர் பற்றிய தகவல்கள் எந்த நூலில் கிடைக்கும். அதுபோல் இலம்பையங்கோட்டூர் தலம் எங்குள்ளது என்பது குறித்த துல்லியமான தகவல் தேவை. அறிந்த நண்பர்கள் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன்.

- சி.வேலுச்சாமி, பெரம்பலூர்

உதவலாம் வாருங்கள்...

வில்வக் கனியில் சதைப் பற்றை நீக்கிப் பக்குவப் படுத்தி திருநீற்றுக் குடுவையாகப் பயன்படுத்துவது விசேஷம். அதனால் சிவகடாட்சமும் செல்வகடாட்சமும் உண்டாகும் என்று ஆன்மிகப் பெரியவர் ஒருவர் கூறினார். அவ்வண்ணம் பக்குவப்படுத்தப்பட்ட வில்வக்கனி ஓடுகள் எங்கு கிடைக்கும். என் நண்பர்களுக்குக் கொடுக்கவும் விரும்புகிறேன். ஆகவே, தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

- அ. திருமலை, முசிறி

ராஜேந்திரச் சோழன் சிவாலயத்துக்குப் பாவை விளக்கு சமர்ப்பித்த திருக்கதை ஒன்று உண்டு. பாவை விளக்குகள் எந்தக் காலத்திலிருந்து புழக்கத்தில் உள்ளன. கல் மற்றும் உலோகத்தாலான பாவை விளக்குகள் குறித்த சிற்ப நுட்பங்களைச் சொல்லும் புத்தகம் தேவை. எங்கு கிடைக்கும்?

- எம்.ராமச்சந்திரன், திண்டிவனம்

உதவலாம் வாருங்கள்...

க்தி விகடன் 15.12.20 தேதியிட்ட இதழில் மேட்டுப் பாளையம் வாசகி கோ.ராஜலட்சுமி, `அனுதினமும் பதிவிரதையர் ஐவரையும் தியானித்து வழிபட வேண்டும் என்று ஆன்மிகச் சொற்பொழிவில் சாது ஒருவர் விளக்கினார். அவர்களை வழிபடவேண்டிய சுலோகத் தையும் சொன்னார். அந்தச் சுலோகம் எனக்கு மறந்து விட்டது. குறிப்பிட்ட சுலோகம் இருந்தால் அனுப்பி வையுங்களேன்' என்று கேட்டிருந்தார்.

பதிவிரதையர் ஐவரையும் வழிபடும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் இங்கே வாசகர்கள் அனைவருக் காகவும்...

அகல்யா திரெளபதி சீதா தாரா

மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன்

நித்யம் மஹா பாதக நாசனம்

உதவலாம் வாருங்கள்...

இல்லத்தரசிகள், அனுதினமும் அதிகாலையில் எழுந்ததும் இந்தச் சுலோகத்தைச் சொல்லி, பதிவிரதையர் ஐவரையும் மனத்தில் தியானித்து, மனமுருக பிரார்த்தித்து வணங்க வேண்டும்.

இதனால், ஒட்டுமொத்த பாவங்களும் விலகும். இப்படி வழிபடுவோரின் வீட்டைத் தீவினைகளும் வறுமையும் அண்டாது. அந்த இல்லத்தில் சகல செல்வ கடாட்சங்களும் பொங்கிப்பெருகும்; எப்போதும் மங்கலம் சூழ்ந்திருக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

அத்துடன் பதிவிரதையரான அகல்யை, திரெளபதி, சீதாதேவி, தாரா தேவி, மண்டோதரி ஆகியோரின் பெருமைகளைச் சொல்லும் திருக்கதைகளையும் படித்து, அவர்களின் மகிமையை அறிந்து துதித்தால், பலன்கள் பன்மடங்காக கிடைக்கும்.

இந்தத் தகவல்களை சேலம் - கோரிமேடு வாசகர் சுகவன சீனிவாசன், சென்னை - கிழக்குத் தாம்பரம் வாசகர் எம்.ஏ.ராஜசேகரன், திருநெல்வேலி வாசகர் காந்திமதிநாதன் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

உதவலாம் வாருங்கள்...

அன்பார்ந்த வாசகர்களே...

ங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை சென்ன-600 002 Email: sakthi@vikatan.com