Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள்.

அன்பார்ந்த வாசகர்களே...

ங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங் கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க் கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லிய மாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உதவிக் கரம் நீட்டியோர்...

`தல விருட்சங்கள் குறித்த தகவல்கள்... குறிப்பாக பாலை விருட்சம் எந்தக் கோயிலின் தல விருட்சம் என்பது குறித்த விவரம் தேவை என்று குறிச்சி வாசகர், கோ.வாசுதேவன் கேட்டிருந்தார். அவருக்கு சென்னை வாசகர் எம்.ராமு கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார்.

சுக்ர கிரகத்துடன் தொடர்புகொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கும், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 21-ஆம் தேதி வரையிலான நாள்களில் பிறந்தவர்களுக்கும் அதிக அளவு பயன் தரும் மரம் ஏழிலைப்பாலை.

சுக்ர கிரகம் மற்றும் ரிஷப ராசி நட்சத்திரக் கூட்டம்

ஆகியவற்றின் நல்ல கதிர்வீச்சுகளைத் தனக்குள் சேமித்து வைத்திருக்கிறது ஏழிலைப்பாலை. வெப்பத்தால் தகிக்கும் பகுதிகளில் கள்ளியும் பாலை மரமும் மட்டுமே நன்கு வளரும். பாலை மரத்திலும் பல வகைகள் உண்டு. அவற்றில், தெய்விக மரமாகத் திகழ்வது ஏழிலைப் பாலை. தமிழகத்தில் திருப்பாலைப் பந்தல், திருக்கழிப்பாலை, திருப்பாலை வனம் முதலான தலங்கள், பாலையின் பெயரால் அமைந்தவை.

இவற்றுள், ஏழிலைப்பாலையை விருட்சமாகக் கொண்ட திருப்பாலைத்துறை, தஞ்சாவூரை அடுத்துள்ள பாபநாசத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே கோயில்கொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம்- ஶ்ரீபாலைவனநாதர்; அம்பாளின் திருநாமம் - ஶ்ரீதவள வெண்ணகையாள்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய விருட்சங்கள் - தெய்வங்களின் பட்டியலை விளமலைச் சேர்ந்த வாசகர் ஆ.அண்ணாமலை மெயிலில் அனுப்பியிருந்தார். அது, வாசகர் வாசுதேவனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ம் தமிழகக் கோயில் சிற்பங்களில் யாழிகள் பிரதான இடம் பிடித்திருக்கும். யாழிச் சிற்பங்கள் குறித்த விரிவான விளக்கம் கொண்ட புத்தகங்கள் ஏதேனும் இருந்தால் விவரம் தெரிவித்து உதவுங் களேன்.

-ஏ.குமார், திருப்பூர்-2

ண்ணன், தாய் - தந்தை, இஷ்ட தெய்வம், குரு, உறவு, பிள்ளை - முதலான உறவுகள் குறித்து நாம் அறிந்த இலக்கணங்களுக்கும் மேலாக, வேறோர் அற்புதமான விளக்கத்தைத் தரும் அற்புத நூல் அறப்பளீசுர சதகம் என்று பெரியவர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். அந்த நூல் தரும் ஞான வழிகாட்டல்கள் அழகானவை என்றும் கூறினார்.

அபூர்வமான இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும். அல்லது எவரிடமேனும் இந்த நூல் இருந்தால் நகல் எடுத்து அனுப்பி வையுங்களேன்.

-கோ.ராமநாதன், திருநெல்வேலி

காஞ்சி காமாக்ஷி, பங்காரு காமாக்ஷி அம்பாள் குறித்து அறிவேன். இதேபோல் ஆதிகாமாக்ஷி அம்பிகைக்கும் கோயில் உண்டு என்று அறிந்தேன். ஆதி காமாக்ஷிக்கான கோயில் எங்குள்ளது. தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தால், அம்பாள் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்.

-சி.சண்முகநாதன், தூத்துக்குடி

ஶ்ரீலலிதா பரமேஸ்வரி அக்ஷரமாலா என்ற ஸ்தோத்திரத்தை நான் சிறுமியாக இருந்தபோது என் பாட்டி கற்பித்தார்.

`ஶ்ரீலலிதாம்பிகே ஶ்ரீலலிதாம்பிகே ஶ்ரீ லலிதாம்பிகே சக்தி சிவே..." என்று தொடங்கி `அத்ரி குமாரி புராரி மனோகரி...' எனத் தொடர்ந்து, `அ' முதல் `க்ஷ' வரை வரிசையாக வரும். ஒவ்வொரு அடியிலும் ஶ்ரீலலிதாம்பிகே...என்ற பல்லவி பாடப்படும்.

இந்த புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் கிடைக்கும் இடத்தை சொல்லி உதவவும்.

-உமா நாகராஜன், சென்னை-86

ன் தந்தையார் கூறி நாகலாபுரம் சென்று மச்ச அவதாரப் பெருமாளை தரிசித்து வந்தேன். நம் தமிழகத்தில் பெருமாள் மச்ச அவதாரக் கோலத்தில் அருளும் வேறு தலங்கள் உண்டா?

கூர்ம அவதாரம் நிகழ்ந்தது ஆந்திரமாநிலம், ஶ்ரீகாகுளம் பகுதியில் உள்ள ஶ்ரீகூர்மம் என்பார்கள். அதேபோல் மச்ச அவதாரத் தலம் தமிழகத்தில் உள்ளது என்கிறார்கள். ஆனால் அது எந்தத் தலம் என்று அறிந்து கொள்ள விருப்பம். தகவல் தெரிந்தவர்கள் பகிருங்களேன்.

-கே.எல்.கோதண்டன், சென்னை-4

நான் சிவ பக்தன். எம்பெருமானின் விடங்கத் தலங்களின் மகிமைகளைப் படித்தறிவதோடு, குறிப்பிட்ட ஊர்களுக்கு நேரில் சென்று தரிசித்து வழிபட்டு வர ஆசை. குறிப்பிட்ட தலங்களின் சிறப்புகள், இருப்பிட விவரம், செல்லும் வழி குறித்த விளக்கங்களை ஆன்மிகப் பெரியோர் எவரேனும் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன்.

-சா.வேலுமணி, சேலம்-2

சிறு வயதில் வீட்டில் எல்லோரும் சேர்ந்து ஶ்ரீநாராயண ஸ்தோத்திரம் சொல்லி வழிபடுவது வழக்கம். அதன் பெயர் ஶ்ரீஆர்த்திஹர நாராயண அஷ்டகம். தினமும் அதைப் படித்து பூஜை செய்தால், நம் மனக் கவலை நீங்கும் என்பார் அப்பா.

தற்போது, முதல் ஸ்தோத்திரத்தின் சில வரிகள் மட்டுமே நினைவில் உள்ளன. `வர்த்ஸல்யாத பயப்ரதானஸமயா...' என்று ஸ்தோத்திரம் தொடங்கும். இதன் முழுத் தொகுப்பும் எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்து உதவுங்களேன்.

-என்.கெளசல்யா, மானாமதுரை

நான் கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோயில்கள் 70, வைணவக் கோயில்கள் 8 ஆகியவை குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறேன். விவரம் அறிந்தவர்கள் பகிருங்களேன்.மேலும் இதுதொடர்பான புத்தகம் இருந்தால், அதுபற்றி விபரத்தையும் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

-ஆ.அண்ணாமலை, விளமல்

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com