Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள்.

ன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங் கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

உதவலாம் வாருங்கள்

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க் கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லிய மாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிரச்ன ஜோதிடம் தொடர்பான புத்தகம் ஏதேனும் உள்ளதா. உண்டு எனில் அது எங்கு கிடைக்கும், எந்த பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- க.சோமசுந்தரம், பரமன்குறிச்சி

வேல்மாறல் பாராயணம் தொடர்பான வழிபாடு குறித்து நண்பர்கள் மூலம் அறிந்து மகிழ்ந்தேன். அதுபோன்று வேலாயுதத்தை வழிபடுவதற்கான வேறு வழிமுறைகள், துதிப்பாடல்கள் உள்ளனவா? விவரம் அறிந்தவர்கள் பகிரலாம் அல்லது குறிப்பிட்ட புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கலாமே.

- எம்.சி.லட்சுமிப்பிரியா, தூத்துக்குடி

தமிழகத்தில் கரக்கோயில்கள் மொத்தம் எத்தனை உள்ளன. நான் அறிந்தவரையிலும் தாராசுரம் கோயில் கரக்கோயில் என்பார்கள். இதுபோன்று வேறு எந்த ஊர்களில் கரக்கோயில்கள் உள்ளன. தகவல் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து விவரம் அறிந்த சரித்திர - கல்வெட்டு - சிற்பத் துறை சார்ந்த வல்லுநர்களின் போன் விவரம் கொடுத்தாலும் நன்று.

- சிவசேகரன், மதுரை-2

எங்கள் பூர்விகம் நெல்லை மாவட்டம். சைவ வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு இரட்டை லிங்கங்கள் அருளும் கோயிலே சாஸ்தா கோயில் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அப்படியான கோயில் எங்குள்ளது என்று தெரியவில்லை. விவரம் அறிந்த நெல்லை மாவட்ட வாசகர்கள் விவரம் தெரிவித்தால், எங்களின் சாஸ்தா வழிபாட்டுக்கு உதவியாக இருக்கும்.

- எம்.முருகேசன், சென்னை-44

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் பல கோயில்களில் தரைகளில் கல் தளத்தில் சில குறியீடுகளைக் கவனித்திருக்கிறேன். கட்டங்களாகவும், வட்டங்களாகவும் இன்னும் பல வடிவங்களிலும் அவை காணப்படும். ஒருமுறை என்னோடு வந்த நண்பர் ஒருவர், கல்வெட்டுகளைப் போன்றே இவையும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தனக்குத் தெரிந்த தகவலைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், அவை பற்றிய விரிவான தகவல்களைத் திரட்ட முடியவில்லை. இதுபற்றி விவரம் அறிந்த நண்பர்கள் அனைவருக்கும் பகிரலாமே.

-எஸ்.கார்த்திகேயன், முசிறி

எங்கள் குடும்பம் இரண்டு தலைமுறைகளாக சென்னையில் வசித்து வருகிறோம். எங்கள் குடும்ப தெய்வம் சுடலையாண்டவர். தெற்கே சுடலைமாட சுவாமியின் வரலாற்றைச் சொல்லும் வில்லுப் பாடல்கள் உண்டு. இசக்கியம்மன் கதையோடு சேர்ந்து சுடலையாண்டவரின் திருக்கதையைச் சொல்லும் விரிவான வில்லுப் பாட்டுக் கதை இருந்தால் பகிருங்களேன்.

- ஆர்.பேச்சியம்மாள், சென்னை- 28

`வேலா திலங்க்ய கருணே...' எனத் தொடங்கும் அருள்மிகு பாலாம்பிகை அஷ்டகம் ஸ்தோத்திரப் பாடல் ஸ்லோகங்கள் தமிழ் வடிவில் விரிவான விளக்கங்களுடன் வேண்டும். எவரிடமேனும் இந்தத் துதிப்பாடல் இருந்தால் தந்து உதவுங்களேன்.

- எல்.காமாக்ஷி, வேலூர்

உதவிக்கரம் நீட்டியவர்கள்...

`சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிவத்தலம், சிறுநீரக நோயைத் தீர்க்கவல்ல பரிகாரத்தலம் என்று கேள்வியுற்றேன். அந்தத் தலம் குறித்த தகவல் தேவை’ என்று சென்னை வாசகி கே.மீனாட்சி கேட்டிருந்தார். அவருக்காக இந்தத் தகவல்...

உதவலாம் வாருங்கள்

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோயில். அம்பாளின் திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி. இந்தக் கோயிலின் சிறப்பம்சம், இங்கே தனிச் சந்நிதி கொண்டிருக்கும் ஆடல்வல்லான்!

அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனவர் இந்த நடராஜப் பெருமான். சிறுநீரகக் கோளாறு களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, கோயிலிலேயே கிடைக்கும் வெட்டிவேரை ஒரு கிலோ அளவில் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகக் கோத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

பின்னர், அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, கோயிலில் அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை (5 லிட்டர் கொள்ளளவு உள்ள) ஒரு கேனில் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த தீர்த்தம் எத்தனை நாட்களானாலும் கெடாது என்பது சிறப்பு. வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்தத்தை ஒரு குவளையில் நிரப்பி, அதில் வெட்டிவேர் மாலையில் இருந்து ஒரு துண்டை எடுத்து அந்தத் தீர்த்தத்தில் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேர்த் துண்டை எடுத்துவிட்டு, அந்த தீர்த்தத்தைப் பருகவேண்டும். இப்படித் தொடர்ந்து 48 நாட்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் மெள்ள விலகும் என்பது ஐதீகம்.

- வி.ராமநாதன், சென்னை-44

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com