Published:Updated:

உதவலாம் வாருங்கள்...

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம்.

உதவலாம் வாருங்கள்...

வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம்.

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

அன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உதவலாம் வாருங்கள்...

மரர் ராஜாஜியின் `இராமாயணம்' தொகுப்பு - ஓவியர் வினு வரைந்த சித்திரங்களுடன் கூடிய நூல் எனக்குத் தேவைப் படுகிறது. எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன். இந்த நூல் கிடைக்கும் இடம் குறித்த விவரம் அறிந்தாலும் பகிருங்கள்; பயனுள்ளதாக இருக்கும்.

- சி.வி.அனந்தராமன், சென்னை-47

ருட புராணம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை, அந்த நூலின் மகிமைகளை அறிய விரும்புகிறேன். இந்தப் புத்தகம் கிடைக்கும் இடம் குறித்த விவரம் அல்லது புத்தக நகல் இருந்தால் கொடுத்து உதவுங்களேன்.

- சொ.நாகராஜன், கோவை-26

`வன மகோத்ஸவம்' எனும் பழைமை வாய்ந்த நூலும் ஸ்ரீபாஸ்கரராயர் எழுதிய `ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாம பாஷ்ய' நூலும் எங்கு கிடைக்கும்? பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவுங்களேன்!

-கே.முருகன், கடலூர்

உதவிக் கரம் நீட்டியோர்...

ழுத்தாளர் மஞ்சுளா ரமேஷ் எழுதிய `51 சக்தி பீடங்கள்' புத்தகம் எங்கு கிடைக்கும் என்று ஓசூர் வாசகர் உடையப்பன் கேட்டிருந்தார். அவருக்காக...

`ஞான ஆலயம் புத்தகம் வெளியீடு, 7/32 இரண்டாம் தெரு, அருணாசலபுரம், சென்னை-20' என்ற முகவரியில் கிடைக்கும் என்று தகவல் அளித்திருக்கிறார்கள் சென்னை வாசகர் சி.வி.அனந்தராமன் மற்றும் மேலகிருஷ்ணன்புதூர் வாசகர் ஆர்.கே. லிங்கேஷன்.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவ சங்கர ஸ்தோத்ரம்

`சிவ சங்கர ஸ்தோத்திரம்' என்ற ஸ்லோகம் உண்டு. வயதான காலத்தில் இந்த அஷ்டகத்தைப் பாராயணம் செய்வது நன்மை பயக்கும் என்பார்கள். முன்பொரு முறை உதவலாம் வாருங்கள் பகுதியில் இந்த அஷ்டகத்தைப் பகிர்ந்திருந்தீர்கள். எனக்கு இப்போது தேவை. மீண்டும் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நெல்லை வாசகர் பி.மகாலிங்கம் கடிதம் மூலம் கேட்டிருந்தார்.

அவருக்காகவும் மற்ற வாசகர்களும் பயன்பெறும் வகையிலும் சக்தி விகடன் இதழில் ஏற்கெனவே வெளியான அந்த ஸ்தோத்திரம் இங்கே...

1. அதி பீஷண கடுபாஷண யமகிங்கர படலீ

க்ருத தாடன பரிபீடன மரணாகம ஸமயே

உம யா ஸஹ மம சேதஸி யம சாஸன நிவஸன்

ஹர சங்கர சிவ சங்கர ஹர மே ஹர துரிதம்

2. அஸதிந்த்ரிய விஷயோதய சுக ஸாத் க்ருத ஸீக்ருதே

பர தூஷண பரி மோஷண க்ருத பாக விக்ருதே

சமனானன பவ கானனநிர தே பவ சரணம்

ஹர சங்கர சிவசங்கர ஹர மே ஹர துரிதம்

3. விஷயா பித படிசாயுத பிசிதாயி த சுகதோ

மக ராயித கதி ஸம் ஸ்ருதி க்ருத ஸாஹஸ விபதம்

பரமாலய பரிபாலய பரிதாபித மளிசம்

ஹர சங்கர சிவசங்கர ஹரமே ஹர துரிதம்

4. தயிதா மம துஹிதா மம ஜனனீ மம ஜனகோ

மம கல் பித மதிஸந்ததி மரு பூமிசு நிரதம்

கிரிஜாஸக ஜனிதா சுக வஸதிம் குரு ஸீகினம்

ஹர சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம்

5. ஜனி நாசன ம்ருதி மோசன சிவ பூஜன நிரதே

அபி தோஸ்த்ருஸ மித மித்ருச மஹமாவஹ இதிஹா

கஜகச்சப ஜனிதச்ரம விமலீ குரு சுமதிம்

ஹர சங்கர சிவசங்கர ஹரமே ஹர துரிதம்

6. த்வயி திஷ்டதி ஸகலஸ்திதி கருணாத் மனி ஹ்ருதயே

வசு மார்க்கண க்ருபணே க்ஷண மனஸா சிவவிமுகம்

அக்ரு தா ஹ்னிக மஸீ போஷக மவதாத் கிரி ஸீதயா

ஹர ஸங்கர சிவசங்கர ஹர மேஹர துரிதம்

7. பித ராவதி ஸீ க தா விதி சிசுனாக்ருத ஹ்ருதயம்

சிவயா ஹ்ருத பய கே ஹ்ருதி ஜனிதம் தவ ஸீஹ்ருதம்

இதிமேசிவ ஹ்ருதயம் பவ பவ தாத் தவ தயயா

ஹர சங்கர சிவ சங்கர ஹர மேஹர துரிதம்

8. சரணா கத பரணா ச்ரித கருணாம்ருத ஜலதே

சரணம் தவ சரணௌ சிவ மம ஸம் ஸ்ருதி வஸதே

பரிசின்மய ஜகதா மய பிஷஜே நதி ரவதாத்

ஹர சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம்

9. விவிதா திபி ரதி பீ திபிரக்ருதாதி ச ஸீக்ருதம்

சத கோடி சு நரகா தி சு ஹத பாதக விவசம்

ம்ரு ட மாமவ ஸீக்ருதீ பவ சிவயா ஸஹக்ருபயா

ஹர சங்கர சிவசங்கர ஹரமே ஹர துரிதம்

10. கலிநாசன கர லாசன கமலாஸன வினுத

கமலாபதி நய நார்ச்சித கருணா ஹ்ருதி சரணம்

கருணாகர முனிஸே வித பவஸாகர ஹரண

ஹர சங்கர சிவசங்கர ஹர மேஹர துரிதம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism