Published:Updated:

உதவலாம் வாருங்கள்...

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம்.

அன்பார்ந்த வாசகர்களே...

உங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

உதவலாம் வாருங்கள்...

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மகிமைகள் குறித்து விளக்கும் தகவல்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

அன்னையின் தாடங்க மகிமையைப் போற்றும் பாடல்கள் ஏதேனும் உண்டா என்பது குறித்தும் விவரம் அறிய விரும்புகிறேன்.

- எஸ்.அருணா, முசிறி

டுகற்கள் வழிபாடு குறித்து படித்து வருகிறேன். அதுபற்றிய தொல்லியல் தரவுகள், வரலாற்று தகவல்கள், நாட்டுப்புறக் கதைகள் அடங்கிய புத்தகம் ஏதேனும் இருக்கிறதா. விவரம் அறிந்தவர்கள், பகிர்ந்து கொள்ளுங்களேன்.

- கே.வசந்தன், மதுரை-2

ரஞ்ஜோதியாரின் திருவிளையாடற் புராணம் நூல் விளக்கவுரைகளுடன் எங்கு கிடைக்கும். எவரிடமேனும் இருந்தால் நகல் எடுத்தும் அனுப்பலாம். பயனுள்ளதாக இருக்கும்.

-சி.முருகவேள், திருச்சி-2

குடும்பப் பிரச்னைகள் தீரவும், எங்கள் குலதெய்வம் குறித்து அறியவும் தேவப் பிரச்னம் பார்க்க வேண்டியுள்ளது. தகுந்த முறையில் பிரச்னம் பார்த்துச் சொல்வோரின் தொடர்பு விவரங் கள் தேவை.

-சி.மீனாட்சி, கடலூர்

ழுத்தாளர் மஞ்சுளா ரமேஷ் எழுதிய 51 சக்தி பீடம் புத்தகம் எங்கு கிடைக்கும். அவருடைய பிற வெளியீடுகளும் தேவைப் படுகின்றன. விவரம் அறிந்த வர்கள் தகவல் பகிருங்களேன்.

-நா.உடையப்பன், ஓசூர்

நான் அம்பாள் உபாசகன். வீட்டில் ஸ்ரீசக்கரம் வைத்து வழிபட விரும்புகிறேன். உரிய முறையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் எங்கு கிடைக்கும்.

-சி.பாஸ்கர், கரூர்

ங்கள் பூர்விகம் திருநெல் வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம். எங்கள் தாத்தா காலத்திலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டோம்.

அம்பா சமுத்திரம் பகுதியில் ஓடைக் கரையில் அருளும் இசக்கியம்மனே எங்கள் குலதெய்வம் என்றொரு பொது வான தகவலை அறிந்தேன். அந்த அம்மன் மற்றும் கோயில் குறித்த விவரம் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால், மிகவும் பயனடைவோம்.

-க.சிதம்பரம், சென்னை-5

மிகையுந் துரத்தவெம்

பிணியுந் துரத்த

வெகுளி யானதுந் துரத்த

மிடியுந் துரத்தநரை

திரையும் துரத்தமிகு

வேதனை களுந்து ரத்தப்

பகையுந் துரத்த

வஞ் சனையுந் துரத்த...

இப்படியொரு பாடலை என் சிறுவயதில் தாத்தா சொல்லிக் கொடுத்ததாக ஞாபகம். முழுப் பாடலும் நினைவில் இல்லை. அம்பாளை வழிபடும்போது, பாடச் சொல்வார். இந்தப் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது. அந்த நூல் எங்குக் கிடைக்கும். விவரம் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- சி.ராமநாதன், துறையூர்

கத்திய முனிவர் வழிபட்ட நிறைய தலங்கள் உண்டு. அவற்றை அகத்தீஸ்வரம் என்று போற்றுவார்கள். அதுபோல் புலத்திய ரிஷி வழிபட்ட சிவத் தலங்களும் உண்டு என்று அறிந்தேன். புலத்தியர் குறித்த வரலாறும், அவர் வழிபட்ட ஆலயங்கள் குறித்தும் தகவல் தேவை.

- வீ.கண்ணன், மேலூர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதவிக் கரம் நீட்டியோர்...

க்திவிகடன் 6.10.2020 தேதியிட்ட இதழிலில் `சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வசதியாக, அதுகுறித்த விளக்கத்துடன் தமிழ் புத்தகங்கள் உண்டா' என்று உவரி வாசகி கல்யாணி கேட்டிருந் தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தை...சென்னை - தாம்பரத்தைச் சேர்ந்த வாசகர் சி.வி.அனந்தராமன், குரோம்பேட்டை வாசகர் டி.கே.தேவநாதன், கூந்தலூர் வி.சந்திரசேகரன் ஆகியோர் அளித்துள்ளனர்.

சுந்தரகாண்டம் நூலை தமிழில் லிப்கோ பதிப்பகம் (ராமேஸ்வரம் ரொடு, சென்னை-17) வெளியிட்டுள்ளது. இந்நூல் தமிழ் உரைநடை யுடன் பாராயணத்துக்கு ஏற்றது.

சக்திவிகடன் 6.10.2020 தேதியிட்ட இதழிலில், `லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்தோத் திரங்களில் ஒன்றான ‘அமிர்த சஞ்ஜீவினி’ ஸ்தோத்திரம் தேவை' என்று சேலம் வாசகி எஸ். பாக்கிய லட்சுமி கேட்டிருந்தார்.

வாசகர் கூந்தலூர் வி.சந்திரசேகரன் `ஸ்ரீஅம்ருதஸஞ்ஜீவநஸ்தோத்ரம்' தொகுப்பை நகல் எடுத்து அனுப்பிவைத்துள்ளார். இந்தத் தொகுப்பு வாசகி எஸ்.பாக்கியலட்சுமிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்'

சக்தி விகடன், 757, அண்ணாசாலை

சென்ன-600 002

Email: sakthi@vikatan.com