Published:Updated:

உதவலாம் வாருங்கள்

எனக்கு மிருத்யுஞ்ஜய மந்திரம் குறித்த விரிவான விளக்கங்களுடன் கூடிய புத்தகம் தேவை. அது எங்கு கிடைக்கும்

பிரீமியம் ஸ்டோரி

அன்பார்ந்த வாசகர்களே...

ங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவிக் கரம் நீட்டியோர்...

`விடங்க தலங்கள் குறித்த விவரம் வேண்டும்' என்று சேலம் வாசகர் சா.வேலுமணி கேட்டிருந்தார். அவருக்கு பட்டீஸ்வரம் வாசகர் கே.சுப்ரமணியன் கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார்.

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்

இந்திரனிடமிருந்து ஏழு தியா கேசர் திருவுருவங்களைப் பெற்றுக்கொண்ட முசுகுந்த சக்கரவர்த்தி, ஆரூருக்கு வந்தான். ஏழு தியாகேசர்களையும் ஒருங்கே வைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டான். திருமால் நெஞ்சில் வைத்திருந்து, இந்திரனிடம் அளித்திருந்த அந்த தியாகேச மூர்த்தத்தை ஆரூரில்... திருவாரூர் தலத்தில் பிரதிஷ்டை செய்தான்.

அடுத்து... ஆறு மூர்த்தங்களையும் ஆறு தலங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இந்த ஏழு இடங்களிலும் ஆடல்வல்லான், ஒவ்வொருவித திருநடனத்தை ஆடிக்காட்டினாராம். இந்த ஏழு இடங்களே `சப்த விடங்கத் தலங்கள்' எனப் போற்றப்படுகின்றன (டங்கம் என்றால் உளி; விடங்கம் என்றால் உளி செதுக்காத, உளி படாத மூர்த்தம் என்று பொருள்).

தமிழகத்தில், திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏழு தலங்கள், சப்தவிடங்க தலங்களாக அமைந்துள்ளன. இந்த ஏழு தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசிப்பது பெரும் பாக்கியம்; பாவங்கள் தொலையும் என்பது ஐதிகம்!

திருவாரூரில் வீதி விடங்கர்; திருக்கோளிலி (திருக் குவளை) யில் அவனி விடங்கர்; திருநள்ளாறில் நக விடங்கர்; திருநாகைக்கோரணத்தில் (நாகப்பட்டினம்) சுந்தர விடங்கர்; திருக்காறாயிலில் (திருக் காரவாசல்) ஆதி விடங்கர்; திருவாய்மூரில் நீலவிடங்கர் மற்றும் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) புவனி விடங்கர் என அருள்பாலிக்கிறார் சிவபெருமான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லோருக்கும் பகவத் கீதை தெரியும். அதேபோல் உத்தவ கீதை என்று ஒரு நூல் உண்டு. கிருஷ்ண பகவானுக்கு இளமை முதலே தேரோட்டிய உத்தவன் என்ற அன்பனுக்காக பகவான் அருளியதே உத்தவ கீதை என்று படித்துள்ளேன்.

உதவலாம் வாருங்கள்

தத்துவ சாரங்களும், விளக்கங்களும் அடங்கிய இந்த ஞானநூல் தனித் தொகுப்பாகக் கிடைக்குமா? இந்த நூல் எங்கு கிடைக்கும் என்பது குறித்த விவரம் அறிந்தவர்கள், தகவல் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும். எவரிடமேனும் இந்த நூல் இருப்பின் நகல் அனுப்பி உதவுங்களேன்.

-கே.ராமுவசந்தன், பேட்டை

சிவ வடிவங்களில் மகத்துவமானது அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருவடிவம். நான் இந்த திருக்கோலம் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறேன். புத்தகம் ஒன்றில் கையில் வீணையோடு அருளும் தட்சிணா மூர்த்தி திருவடிவம் நஞ்சன்கூடு தலத்தில் இருப்பதாகப் படித்தேன். தமிழக்கத்தில் இவ்வடிவம் எங்குள்ளது?

- சு.சங்கரி, தூத்துக்குடி

பார்வதி தேவியின் மறு வடிவம் நிமிஷாம்பாள். இந்த அம்பாளுக்கான திருக்கோயில் மைசூருக்கு அருகில் உள்ளது என்றொரு தகவலை வாட்ஸப் பகிர்வுகளில் பார்த்தேன். பக்தர்களின் குறைகளை நிமிடப் பொழுதில் தீர்ப்பவள் என்பதால் இப்படி ஒரு திருப்பெயர் என்றும் தகவல் பகிர்ந்திருந்தனர். இந்த நிமிஷாம்பாள் தலம் மைசூர் அருகில் எந்த ஊரில் உள்ளது. விரிவான தகவல் அறிந்தவர்கள் பகிருங்களேன்.

-எம்.ராமமூர்த்தி, மதுரை-2

குருவாயூரில் அருளும் குருவாயூரப்பனின் திருப்புக்கா தரிசனம் குறித்து சக்தி விகடனில் படித்து மகிழ்ந்தேன். இதேப்போல் குருவாயூரப்பன் சந்நிதியில் வேறு என்னென்ன சிறப்பு அம்சன்கள் உண்டு. தெரிந்தவர்கள் தொகுத்தளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கோ.ரவிசங்கர், சென்னை-5

எனக்கு மிருத்யுஞ்ஜய மந்திரம் குறித்த விரிவான விளக்கங்களுடன் கூடிய புத்தகம் தேவை. அது எங்கு கிடைக்கும்?

- சி.பரமேஸ்வரன், காரைக்கால்

கோவைக்கு அருகில் கல்யாண நவகிரகங்கள் என்ற சிறப்புடன், நவகிரக மூர்த்திகள் தேவியருடன் அருளும் கோயில் உண்டு என்று பெரியவர் ஒருவர் தகவல் சொன்னார். ஆனால், அந்தக் கோயில் குறித்த முழு விவரம் அவருக்குத் தெரியவில்லை. விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால், நேரில் சென்று தரிசித்து வர உதவியாக இருக்கும்.

- ஜி.கல்பனா, சென்னை-44

கண்ணனின் அவதாரக் கதையில் வரும் ராதை குறித்த வழிபாடுகள் வடமாநிலங்களில் உண்டு. அங்கே ராதா கல்யாண வைபவமும் நடைபெறும் என்று கேள்விப்பட்டேன். நம் தமிழகத்தில் ராதை திருக்கல்யாண வைபவம் எங்கேனும் நிகழ்கிறதா. ராதையின் அவதாரச் சிறப்பை விளக்கும் நூல்கள் ஏதேனும் உள்ளனவா? விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்து உதவுங்களேன்.

- எல்.மணவாளன், கோவை-2

எங்கள் வீட்டு பூஜையறையில், நான்கு வேதங்களும் அடங்கிய புத்தகங்களை வைத்து வணங்கலாம் என்று எண்ணியுள்ளோம். இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?

-கே.மீனாக்ஷி, கடையநல்லூர்

தர்ம சாஸ்திரம், குரவைக் கூத்து, கிருஷ்ண கர்ணாம்ருதம் (லீலா சுகர்), ஸ்ரீசியாமளா தாண்டகம்' ஆகிய நூல்கள் எங்கு கிடைக்கும்? இதுகுறித்து தெரிந்தவர்கள் தகவல் தந்து உதவுங்களேன்!

- கே.சந்திர மூர்த்தி, கடலூர்

திருக்கடவூர் அருகிலுள்ள ஆதிக்கடவூர் திருக் கோயில் பற்றிய புராணத் தகவல்கள் தேவை. எவரிடமேனும் இருந்தால் பகிருங்களேன்.

கோ.முருகன், சென்னை-6

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி: `உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை சென்ன-600 002 Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு