Published:Updated:

வாருங்கள்... மதுரையைக் கொண்டாடுவோம்! அசத்தலான 6 தொடர்கள் ஆரம்பம்!

மதுரை
மதுரை

மரபு உணவுகள், சிலிர்ப்பூட்டும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், விளையாட்டுகள், வேளாண் முறைகள் என மதுரையில் தளும்ப தளும்ப தமிழர்களின் பாரம்பர்யம் நிறைந்திருக்கிறது.

இந்தியாவின் தொல்நகரங்களில் ஒன்று மதுரை. இன்னும் கிராமியத் தன்மையையும் ஈரத்தையும் இழக்காத மனிதர்களைக் கொண்ட இந்த மாநகரம், தமிழச் சமூகத்தின் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் இன்னும் தன்னுள் தாங்கி வளர்த்துக்கொண்டிருக்கிறது.

மரபு உணவுகள், சிலிர்ப்பூட்டும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், விளையாட்டுகள், வேளாண் முறைகள் என மதுரையில் தளும்ப தளும்ப தமிழர்களின் பாரம்பர்யம் நிறைந்திருக்கிறது.

நாகரிகத்தில் உச்சம்பெற்ற அறிவார்ந்த மனிதர்கள் வாழ்ந்த பழைமையான நகரங்கள் புதைவிலிருந்து மீட்கப்படுகின்றன. வழக்கொழிந்த பல அபூர்வ இசைக்கருவிகள் மதுரையில் பயன்பாட்டில் இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் மதுரை நிலக்காட்சியை அவ்வளவு தத்ரூபமாக காட்சிப்படுத்துகின்றன.
இந்தளவுக்கு வரலாற்று நகரமாக விளங்கும் மதுரையைக் கொண்டாடுவதற்கான, போற்றுவதற்கான தருணம் இது.

மதுரை
மதுரை
மதுரையின் சரித்திரத்தை, மதுரையின் அடையாளச் சின்னங்களை, மதுரையின் உணவு பாரம்பர்யத்தை, மற்றவர்கள் மேல் அக்கறை கொண்ட எளிய மனிதர்களை, மதுரையைச் சூழ்ந்திருக்கும் வழிபாட்டுத் தலங்களைப் போற்றும் வகையில் Vikatan.com-மில் 6 தொடர்களைத் தொடங்குகிறோம்.

திங்கள்கிழமையன்று, ந.புஹாரி ராஜா எழுதும் 'மதுர மக்கள்', செவ்வாயன்று அ.முத்துகிருஷ்ணன் எழுதும் 'தூங்காநகர நினைவுகள்', புதனன்று பர்வதவர்த்தினி எழுதும் 'மதுரை-மூதூர் மாநகரத்தின் கதை', வியாழனன்று செ.சல்மான் பாரீஸ் எழுதும் '#Madurai_Hangout', வெள்ளியன்று சைலபதி எழுதும் 'வைகை நதிக்கரை ஆலயங்கள்', சனியன்று செ.சல்மான் பாரீஸ் எழுதும் 'மதுர ருசி' என மதுரையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் தொடர்கள் அணி வகுகின்றன.

வாசிக்க, விமர்சிக்க வாசகர்களை வரவேற்கிறோம்.
வாருங்கள், கரம் கோத்துக் கொண்டாடுவோம் மதுரையை!

அடுத்த கட்டுரைக்கு