"எடப்பாடிக்கு எதிரா தங்கமணியும் வேலுமணியும் கோவிச்சுக்கிட்டு ஓடுனவங்கதானே..?!" - ரகசிய சந்திப்பு... தீர்ப்பு... அதிமுக திக் திக் திக்!
சுற்றுப் பயணம் செய்து கட்சிக்குள் தன்னை வலிமையாக நிலைநிறுத்தப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே, யாரும் எதிர்பாராத ரகசிய சந்திப்புகளும் நடந்தேறியிருக்கின்றன. விரைவில் வெளிவரவிருக்கும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, அ.தி.மு.க-வின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கக் காத்திருக்கும் நிலையில், கட்சிக்குள் நடக்கும் இந்தக் கபடி, தொண்டர்களை 'திக் திக் திக்' பதற்றத்தில் வைத்திருக்கிறது..!
மிஸ்டர் கழுகு: ஒன்று சேர்ந்த ஸ்டாலின் - அழகிரி குடும்பம்! - பின்னணியில் பா.ஜ.க?
நீண்டகாலத்துக்குப் பிறகு, மு.க.அழகிரியின் குடும்பமும், முதல்வர் ஸ்டாலினின் குடும்பமும் ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஏன் இந்த திடீர்ப் பாசம், ஆளுநரின் அப்செட், , 'மந்திரி' போல பவனிவரும் 'ஜெயமான' பிரமுகர், சசிகலா, பன்னீர்செல்வம் சந்திப்பு என கழுகார் தரும் பல முக்கிய அரசியல் நிகழ்வுகளின் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்கள்...
'பொறுப்புகளைப் பெறுவதற்கே ஆளில்லை...' - கரைசேருமா தே.மு.தி.க கப்பல்?
'கேப்டன்', 'கறுப்பு எம்.ஜி.ஆர்' என்று தே.மு.தி.க தொண்டர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், ஆகஸ்ட் 25-ம் தேதி 70-வது வயதை நிறைவுசெய்கிறார். அடுத்த செப்டம்பர் 14-ம் தேதி அவரது கட்சி, 17 வருடங்களை நிறைவுசெய்கிறது. இந்தப் பின்னணியில் விஜயகாந்த்தின் உடல்நிலை, அவரது கட்சியின் நிலை எப்படியிருக்கிறது என்று விஜயகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் பேசியதில் கிடைத்த தகவல்கள்...
'பாஜக-விடம் திமுகவுக்கு சமரசமே கூடாது!'- திருமா க்ளியர்
வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி, தன் அறுபதாவது வயதில் அடியெடுத்துவைக்கிறார் 'விடுதலைச் சிறுத்தைகள்' கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நடந்த அமளிகள், தி.மு.க-வுடன் கூட்டணியி, இருப்பதால் மாநில அரசை வலுவாக எதிர்க்க முடியவில்லையா, நீங்கள் எடுத்துச் சொல்வதை தமிழக அரசு கேட்கிறதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு திருமாவளவனின் தெளிவான பதில்கள்....
மின் மசோதா 'ஷாக்': இனி என்னவெல்லாம் நடக்கும்?
மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் தாக்கல் செய்த போது, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சபையை முடக்கின. அதனால், உடனடியாக மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கும் அளவுக்கு இந்தத் திருத்தப்பட்ட மசோதாவில் அப்படி என்னதான் கூறப்பட்டிருக்கிறது..?
உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் முழு விவரங்கள்