தமிழ் ஊடக உலகின் முதன்மை ஆளுமைகள் பலரின் முதல்படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இத்திட்டத்தின் 2019-20ஆம் ஆண்டுப் படை தயாராகிவிட்டது. ஒரு கையில் பேனாவும் மறுகையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,104 மாணவர்களில், பல கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 57 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 19, 20, 21 தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கிறது.
புதிய கனவுகள், இனிய இலக்குகளுடன் நெடிய பயணத்துக்குத் தயாராகும் இளையவர்களை வாழ்த்தி வரவேற்கிறான் விகடன்!
- ஆசிரியர்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

