Published:Updated:

`வாங்க... இன்னும் நிறைய பேசலாம்!' - விகடன் அழைக்கிறான்

விகடன் அழைக்கிறான்!
விகடன் அழைக்கிறான்!

விகடன் தளத்தில் கமென்ட் மூலம் உரையாடும் வாசகர்களின் கருத்துகளை நாங்கள் எப்போதுமே மதிக்கிறோம்.

அன்பு வாசகர்களே!

விகடன் தளத்தில் வெறுமனே செய்திகளைப் படிப்பதுடன் மட்டும் வாசகர்களின் வேலை முடிந்துவிடுவதில்லை. விகடனுக்குப் பாராட்டோ, கண்டிப்போ அதை முதலில் தெரிவிப்பது வாசகர்களாகிய நீங்கள்தான். செய்தி பதியப்படும் அதே வேகத்தில் வாசகர்கள் கமென்ட் வழியாக தங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

நாங்கள் செய்தியில் தவறவிட்ட ஒரு கோணம், நாங்கள் சறுக்கிய ஓர் இடம், சிறிய எழுத்துப்பிழை முதல் மன்னிக்க முடியாத பெரிய பிழை வரை எங்களுக்கான கண்டிப்பான ஆசிரியர்களும் நீங்கள்தான். கண்டிப்பான ஆசிரியர் மட்டுமல்ல, கனிவான சக தோழர்களும் நீங்கள்தான். தேசத்தை உலுக்கும் பேரிடர் முதல் உணவின்றி இரவு கண்விழிக்கும் கடைக்கோடி மனிதனின் குரலை நாங்கள் பதிவு செய்வது வரை அத்தனைக்கும் எங்களுடன் கரம் கோப்பதும் நீங்கள்தான்.

அப்படி எங்களுடன் விகடன் தளத்தில் கமென்ட் மூலம் உரையாடும் வாசகர்களின் கருத்துகளை நாங்கள் எப்போதுமே மதிக்கிறோம். வாசகர்களின் கருத்துகளைப் பல வழிகளில் நாங்கள் செயல்படுத்துகிறோம்.

வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும் வசதியைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது வாசகர்கள் கருத்துகளைப் பதிவு செய்வதற்கான வழிகளை எளிமைப்படுத்துவதற்காக இனி Gmail/Facebook/Twitter மூலமும் லாகின் செய்து கருத்து பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

இந்த ஐக்கான்களை நீங்கள் க்ளிக் செய்து உங்கள் கருத்துகளை இனி எளிதாகப் பதிவு செய்ய முடியும்.
இந்த ஐக்கான்களை நீங்கள் க்ளிக் செய்து உங்கள் கருத்துகளை இனி எளிதாகப் பதிவு செய்ய முடியும்.
பாசிட்டிவோ நெகட்டிவோ, பாராட்டோ அறிவுறுத்தலோ.... தயங்காமல் பதிவு செய்யுங்கள். வழக்கத்தைவிட உங்களிடம் இருந்து அதிகமான கருத்துகளை எதிர்பார்த்து காத்திருக்கிறான் விகடன்!
நன்றி
அடுத்த கட்டுரைக்கு