Published:Updated:

`அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டக் கூடாது' - பாலியல் வழக்கில் பினோய் கொடியேரிக்கு முன் ஜாமீன்!

சிந்து ஆர்

`போலீஸ் விரும்பினால் டி.என்.ஏ. சோதனை செய்யலாம். அதற்கான ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும்' என்பது போன்ற கடும் நிபந்தனைகள் விதித்து பாலியல் வழக்கில் சிக்கிய பினோய் கொடியேரிக்கு மும்பை கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

பினோய் கொடியேரி
பினோய் கொடியேரி

கேரள மாநில சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி மீது பீகாரைச் சேர்ந்த இளம் பெண் மும்பை போலீஸில் பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் ``துபாய் பாரில் டான்சராக இருந்த சமயத்தில் பினோய் கொடியேரி அறிமுகம் ஆனார் என்றும், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருக்கமாக இருந்தார்.

கொடியேரி பாலகிருஷ்ணன்
கொடியேரி பாலகிருஷ்ணன்

அதன்மூலம் தனக்கு ஒரு குழந்தை பிறந்தது. பின்னர் மும்பையில் ஒரு பிளாட்டில் தங்க வைத்த பினோய் கொடியேரி தன்னைக் கைவிட்டுவிட்டார். அவருக்கு வேறு திருமணம் நடந்த விஷயம் பின்னர்தான் தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

பீகார் பெண் தன்னை பிளாக்மெயில் செய்வதாகக் கூறிய பினோய் கொடியேரி, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மும்பை தின்தோஷி செசன்ஸ் கோட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே ஒருமுறை விசாரணையைத் தள்ளிவைத்த கோர்ட்டு நேற்று விசாரணைக்கு எடுத்தது. அதில் முன்ஜாமீன் தொகையாக 25,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

பினோய் கொடியேரி
பினோய் கொடியேரி

ஒருமாத காலத்துக்கு திங்கள்கிழமை தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். போலீஸ் விரும்பினால் டி.என்.ஏ பரிசோதனைக்கு உடன்பட வேண்டும். அதற்கான ரத்த மாதிரிகள் கொடுக்க வேண்டும். சாட்சிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டக் கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகளுடன் பினோய் கொடியேரிக்கு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.