'மூன்று தினங்களுக்கு மழை தொடரும்!' வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவிப்பு | Rain may likely continue for next few days in Tamilnadu and Puducherry, says Balachandran

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (31/10/2017)

கடைசி தொடர்பு:15:04 (01/11/2017)

'மூன்று தினங்களுக்கு மழை தொடரும்!' வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவிப்பு

''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் மூன்று தினங்களுக்கு மழை பெய்யும்'' என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மழை


சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக மழை பெய்துவருகிறது. சென்னையில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ''இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, தற்போது மன்னார் பகுதிக்கு நகர்ந்துள்ளது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில தினங்களுக்கு மழை நீடிக்கும். தென் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தமிழகத்தில், அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 18 செ.மீ மழையும், மீனம்பாக்கம் பகுதியில் 16 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.