’மத்தியில் ஆளும் பா.ஜ.க நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெறுவதா?’ - சுப்பிரமணியன் சுவாமி வேதனை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவினருக்கு பேரிடியாக விழுந்துள்ளது. காரணம் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். நான்கு சுற்று நிலவரப்படி 20,298 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இது அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு கிடைத்துள்ள வாக்குகளை விட கிட்டத்தட்ட 11,000 வாக்குகள் அதிகம். திமுகவும் பின்னடைவு பெற்றுள்ளது.

subramaniyan swamy
 

பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் இதுவரை 220 வாக்குகள் மட்டுமெ கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை  நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளைவிட குறைவு. பா.ஜ.க வின் இந்த நிலைமை பற்றி பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு தமிழகத்தின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது. இது தமிழக பா.ஜ.கவின் சாதனை. இதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!