மதுரை மக்களை அசத்திய காஷ்மீர் கலைஞர்கள்!

மத்திய அரசின் ஒன்றே பாரதம், ஒப்பில்லா பாரதம் என்ற திட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்த  புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வர்த்தகம், கலை, பாரம்பர்யம், மொழியைப் பரிமாறிக்கொள்ளவும், சுற்றுலா சென்று வருவதும் இதன் நோக்கமாகும்.

மதுரை மக்களை அசத்திய

அந்த அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழக பாரம்பர்ய கலைக்குழுக்கள் காஷ்மீர் செல்லவுள்ளார்கள். தற்போது காஷ்மீர் கலைக்குழு தமிழகம் வந்துள்ளது. இதில் ஜம்மு, காஷ்மீர், லடாக், டோக்ரா பகுதியைச் சேர்ந்த பாரம்பர்ய கலைக்குழுவினர் வந்தனர். மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த நிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவராவ் நேற்று தொடங்கிவைத்தார்.

இதில் காஷ்மீரி நடனம், டோக்ரி நடனம், லடாக்கி நடனம், தாம்ப்லி நடனம், கோஜ்புரி நடனம் மற்றும் காஷ்மீர் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. காஷ்மீர் மக்கள் மிகுந்த கலை ரசனை உடையவர்கள் என்பது இக்கலைஞர்களின் நிகழ்வுகளை பார்க்கும்பொழுது தெரியவந்தது. நிகழ்ச்சி முழுவதுமே மதுரை மக்கள், கலைஞர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். இரண்டு மாநில கலை பண்பாட்டுத் துறையினர் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்கள். இன்றும் இந்த நிகழ்ச்சி மதுரையில் நடைபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!