வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப்போகும் பெண்!

ந்திய நீதித்துறையில் முதன்முறையாக வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கப்போகிறார் இந்து மல்கோத்ரா என்ற பெண்.

வழக்றிஞராக இருந்து நீதிபதியான பெண்

1950-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உருவானது. 68 ஆண்டு கால வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் இந்து மல்கோத்ராவையும் சேர்த்து 7 பெண்கள்தான் நீதிபதியாகியுள்ளனர். 1989- ம் ஆண்டு முதன்முறையாக பாத்திமா பீவி உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் உள்ள 25 நீதிபதிகளில் பானுமதி மட்டுமே ஒரே பெண் நீதிபதி. 

இந்து மல்கோத்ரா உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர். பெங்களூருவைச் சேர்ந்த இவர், 1956-ம் ஆண்டு பிறந்தவர். 1983-ம் ஆண்டு வழக்கறிஞர் தொழிலுக்குள் நுழைந்தார். சுமார் 30 ஆண்டுகள் அனுபவமிக்க இவரின் திறமையை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய கொலிஜியம்,  நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்துள்ளது. அதேபோல், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜேசப்பும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

2007-ம் ஆண்டு முதல் இந்து,  உச்ச நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.  நீதிபதி லீலா சேத்  உச்ச நீதிமன்ற சீனியர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். அதற்குப் பிறகு, பெண் வழக்கறிஞர்களில் இந்து மல்கோத்ராவுக்கு மட்டுமே சீனியர் வழக்கறிஞர் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக கொலிஜியம் பரிந்துரைக்கும் நபர்களை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!