வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (14/02/2018)

கடைசி தொடர்பு:09:57 (14/02/2018)

ஸ்டாலினை முதல்வராக்குவதே எனது குறிக்கோள்..! வைகோ உறுதி

என்னை ராசியற்றவன் என்று சிலர் சொல்கிறார்கள். தி.மு.க-வுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தவன் என்று தன் மனக்குமுறலை இறக்கி வைத்துப் பேசினார் வைகோ.

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய வைகோ, 'தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தவே நான் வந்துள்ளேன். கழகம் இல்லாத தமிழகம் என்று சிலர் சொல்வதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. திராவிட அரசியலில் வளர்ந்தவன் நான். தளபதி ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் ஓய மாட்டேன்.

ராசியற்றவனா

கருணாநிதிக்கும் எனக்கும் ஏற்பட்டது தகப்பன் மகனுக்குள் ஏற்பட்ட மோதல் போன்றதுதான். கருணாநிதிக்கு எப்படி கவசமாக இருந்தேனோ, அதுபோல ஸ்டாலினுக்கும் இருப்பேன். என்னை ராசியற்றவன் என்று கூறுகிறவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்.  சங்கரன்கோயிலில் தி.மு.க-வை வெற்றிபெறவைத்தவன் நான். அதற்காக என்னை ராஜ்யசபாவுக்கு கருணாநிதி அனுப்பிவைத்தார். மயிலாடுதுறை இடைத்தேர்தலில் நானும் கோ.சி.மணியும் இணைந்து வெற்றியைத் தேடித்தந்தோம்.

அதற்குப் பின், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பதவியை தி.மு.க-வில் கொடுத்தார்கள். அதனால் சொல்கிறேன், ஸ்டாலினை அடுத்த முதலமைச்சராக்குவேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், எந்தப் பதவியையும் தேடி இக்கூட்டணிக்கு வரவில்லை. தளபதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டுமென்பதுதான் எனது விருப்பம். திராவிட இயக்கத்துக்கு ஒரு ஆபத்து என்றால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். வெற்றி ஒன்றேதான் குறிக்கோள்' என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க