`வில்லியம்சன் - மனீஷ் பாண்டே அசத்தல்' - போராடித் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! | Royal Challengers Bangalore won by 14 runs

வெளியிடப்பட்ட நேரம்: 23:50 (17/05/2018)

கடைசி தொடர்பு:10:25 (18/05/2018)

`வில்லியம்சன் - மனீஷ் பாண்டே அசத்தல்' - போராடித் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில், பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

photo credit: @ipl

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் ஃபீல்டிங் தேர்வுசெய்தது. இதையடுத்துக் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, ஓப்பனிங் வீரர்கள் சொதப்பினாலும், டிவிலியர்ஸ் - மொயின் அலி ஜோடி, சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தது.  ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களைப் பதம்பார்த்த இந்த ஜோடி, 3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் குவித்தது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக, டிவிலியர்ஸ் 69 ரன்களும், மொயின் அலி 65 ரன்களும் எடுத்தனர். 

இதன்பின்னர், இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, அலெக்ஸ் ஹேல்ஸ் - தவான் இணை தொடக்கம் தந்தது. கடந்த இரண்டு ஆட்டங்களில் மிளிர்ந்த தவான், இந்த முறை ஏமாற்றினார். 18 ரன்களுக்கு அவர் அவுட் ஆக, மறுமுனையில் அதிரடி காட்டிவந்த ஹேல்ஸ் 37 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் இணைந்த கேப்டன் வில்லியம்சன் - மனீஷ் பாண்டே, பெங்களூரு பந்துவீச்சாளர்களைச் சோதித்தனர். நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்த இந்த ஜோடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாயிருந்த நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர், 81 ரன்கள் குவித்தார். எனினும், அடுத்து வந்த வீரர்கள் சொதப்ப, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் மட்டுமே சேர்த்தது ஹைதராபாத் அணி. இதன்மூலம், பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாண்டே 62 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க