வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (18/05/2018)

கடைசி தொடர்பு:20:57 (18/05/2018)

சன்னி லியோனின் `வீரமாதேவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சன்னி லியோன் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாவதை எதிர்த்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், இன்று `வீரமாதேவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக சன்னி லியோன், துணைக் கதாபாத்திரங்களாக நாசர், அம்ரித் ஆகியோர் நடிக்கின்றனர். `தம்பி வெட்டோத்தி சுந்தரம்', `சௌகார் பேட்டை' போன்ற படங்களை இயக்கிய வி.சி வடிவுடையான் இப்படத்தை இயக்குகிறார். 

வீரமாதேவி பர்ஸ்ட் லுக்

வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில், வாள் சண்டை மற்றும் கத்திச் சண்டை ஆகிய பயிற்சிகளைக் கற்றுக்கொண்ட பின்பே சன்னி லியோன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ரிஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்காக 150 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் சன்னி லியோன். `ஸ்டீவ்ஸ் கார்னர்' எனும் நிறுவனம் பிரம்மாண்ட பொருள்செலவில் இதனைத் தயாரிக்கவிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக், சன்னிலியோன் குதிரை மீது  உட்கார்ந்து போருக்குத் தயாராகி நிற்பதை குறிக்கிறது. இந்த மாதிரியான ஒரு தென்னிந்தியப் படத்தில் நடிப்பதன் மூலம், ஆக்‌ஷன் ஹீரோயின் அவதாரம் எடுக்கலாம் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டிருக்கிறார் சன்னி லியோன். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.