Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லிக்குக் கைகொடுத்த விஜய் சங்கர், ஹர்ஷல் படேல்! சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு #DDvsCSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. 

சென்னை வீரர் இங்கிடி

Photo Credit: Twitter/IPL

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் டேவிட் வில்லிக்குப் பதிலாக லுங்கி இங்கிடி அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல், டெல்லி அணியின் மேக்ஸ்வெல் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். 

டெல்லி அணியின் இன்னிங்ஸை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் தொடங்கினர். தொடக்கம் முதலே சென்னைப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். இதனால், டெல்லி வீரர்கள் ரன் குவிக்கத் தடுமாறினர். அணியின் ஸ்கோர் 24 ஆக இருந்த போது, 17 ரன்கள் எடுத்திருந்த பிரித்வி ஷா, தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரிஷாப் பன்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து ரன் குவிக்க முயற்சி செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களில் வெளியேறினார். இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பன்ட், சென்னை அணியின் பந்துவீச்சில் தொடக்கத்தில் திணறினார். பின்னர், சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர், 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர்கள் இருவரும் இங்கிடி வீசிய 11-வது ஓவரில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வெல், இளம் வீரர் அபிஷேக் ஷர்மா ஆகியோர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ஜடேஜா வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற மேக்ஸ்வெல், ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல், ஸ்ரதுல் தாகுர் பந்துவீச்சில் அபிஷேக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி அணி 14.4 ஓவர்களில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Photo Credit: Twitter/IPL

இந்தநிலையில், 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் ஹர்ஷல் படேல் இணை, ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 150 ரன்களைக் கூட டெல்லி அணி தாண்டாது என்று கணிக்கப்பட்ட நிலையில், இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக பிராவோ வீசிய கடைசி ஓவரில் இந்த இணை, 4 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் குவித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஹர்ஷல் படேல் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement