வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (15/06/2018)

கடைசி தொடர்பு:12:30 (15/06/2018)

கன்னியாகுமரி, கேரளாவில் ரம்ஜான் கொண்டாட்டம்!

கோட்டாறு இலன்கடை, சூரங்குடி, திட்டுவிளை உட்பட அனைத்து பள்ளி வாசல்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இலன்கடை அல் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளி வாசல் முன் நடந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

ளைகுடா நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ரம்ஜான் கொண்டாட்டம்

ரம்ஜான் புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாள்கள் உண்ணா நோன்பு இருந்து நோன்பு கடைபிடித்தனர். கடந்த மாதம் 17-ம் தேதி நோன்பு தொடங்கியதையடுத்து இன்று ரம்ஜான் கொண்டாடப்படுவதாக கூறப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு இன்று விடுமுறையும் அறிவித்தது. ஆனால், ரம்ஜானுக்கான பெருநாள் பிறை தமிழகம் எங்கும் தெரியாததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாஹூதின் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் ரம்ஜானுக்காக பள்ளிகளுக்கு இன்று விடப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. நாளை ரம்ஜான் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரம்ஜான் சிறப்பு தொழுகை

ஆனால், வளைகுடா நாடுகளில் நேற்று பிறை தெரிந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோட்டாறு இலன்கடை, சூரங்குடி, திட்டுவிளை உட்பட அனைத்துப் பள்ளி வாசல்களிலும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்தது. இலன்கடை அல் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளி வாசல் முன் நடந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.