வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (15/06/2018)

கடைசி தொடர்பு:13:30 (15/06/2018)

தாய், மகளுக்கு 20 பேர் கொண்ட கும்பலால் நடந்த பயங்கரம்!

பீகார் மாநிலத்தில் கணவரை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு மனைவியையும் அவர் மகளையும் 20 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்புணர்வு

பீகார் மாநிலம் காயா மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர், அவர் மனைவி மற்றும் 12 வயது மகளுடன் இரவு 8 மணியளிவில் அவரது மருத்துவமனையிலிருந்து பைக்கில் சென்றுள்ளார். காயா மாவட்டம் சோன்திஹா பகுதியில் செல்லும்போது, துப்பாக்கி வைத்திருந்த 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. பின்னர், மருத்துவரை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு, அவரின் மனைவி மற்றும்
12 வயது மகளைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து, புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக 20 பேரைக் கைது செய்துள்ளனர். அதில், இரண்டு பேரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், `பா.ஜ.க-வுடன் நிதிஷ்குமார் கரம் கோத்த பிறகு சட்டம் ஒழுங்கு குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.