தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: அரசாணை வெளியீடு | TamilNadu government has issued an order to ban use of plastic in the state

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (06/07/2018)

கடைசி தொடர்பு:17:50 (07/07/2018)

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடை

தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பால் பாக்கெட், பால் பொருள்கள், மருந்துப் பொருள்களுக்கு மட்டும் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உலகச் சுற்றுச்சுழல் தினமான ஜூன் 5-ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், ``2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் தயாரிக்கலாம். மனித உயிருக்கும் சுகாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தமிழகத்தில் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும்’’ என்றார். இதையடுத்து தற்போது இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.