4 ஆண்டு சிறை: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு!

பெங்களூரூ: 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!