வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (14/09/2015)

கடைசி தொடர்பு:17:27 (14/09/2015)

எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் காலமானார்!

பிரபல எழுத்தாளரும் வரலாற்று புதின எழுத்தாளருமான கௌதம நீலாம்பரன் மாரடைப்பால் இன்று காலமானார். ‘புத்தரின் புன்னகை’ என்ற கதையின் மூலம் எழுத்துலகுக்கு நுழைந்த கௌதம நீலாம்பரன் இறுதிவரை இடைவிடாது எழுத்துப்பணியை தொடர்ந்தவர். சுதேச மித்திரனில் 1970 ல்  வெளிவந்த இந்த கதையைத் தொடர்ந்து, பல படைப்புகளை எழுதிக்குவித்துள்ளார்.

தீபம், இதயம் பேசுகிறது, ஞானபூமி, ஆனந்த விகடன், குங்குமம், குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களில் இவர் பணியாற்றியுள்ளார். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, பட்டிமன்றம் என நான்கு துறைகளிலும் சிறந்துவிளங்கியவர் கௌத நீலாம்பரன். கவிதை, சிறுகதை, கட்டுரை, வரலாற்று நவீனம் என நான்கு தளங்களிலும் இயங்கிய வந்தவர். இளம் தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவித்தவர்.

kow

கௌதம நீலாம்பரன் இளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டுவதை ஒரு பணியாகவே தன் வாழ்நாளில் செய்து வந்தவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டும் சுபாவமுடையவர். வரலாற்றுப் புதினங்களை இருண்மையற்ற சமகால மொழியில் தந்து எழுத்தில் புதுப்பாதையை போட்டவர். அவரது ‘புத்தர்’ பற்றிய நூல் தமிழில் மிகவும் முக்கியமானது.

பல்லவன் தந்த அரியணை, அதியமான் கோட்டை, ஈழவேந்தன் சங்கிலி, உதய பூமி, கலிங்க மோகினி, காலம் போற்றும் சரித்திர சம்பவங்கள், சாணக்கியரின் காதல் உள்ளிட்ட இவரது படைப்புகள் வாசகர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்பட்டவை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்