ரஞ்சி கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்து வாசிம் ஜாபர் சாதனை!

ஞ்சி கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் பெற்றுள்ளார்.

கொல்கத்தாவில் மேற்கு வங்க - விதர்பா அணிகளுக்கிடையேயான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் மேற்கு வங்க அணி 334 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

தொடர்ந்து விதர்பா அணி பேட் செய்யத் தொடங்கியது. இந்த போட்டியில் விதர்பா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிம் ஜாபர் 7 ரன்கள் எடுத்த போது,  ரஞ்சி டிராபியில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ரஞ்சி டிராபியை பொறுத்த வரை 126 போட்டிகளில் 196 இன்னிங்ஸ்களில் விளையாடி வாசிம் ஜாபர் இந்த சாதனையை எட்டியுள்ளார். இதில் 35 சதங்களும் 41 அரை சதங்களும் அடங்கும். சராசரி 58.14 ஆகும். துலீப் டிராபி போட்டியில்2 ஆயிரத்து 545 ரன்களையும் இரானி கோப்பையில் 1008 ரன்களையும் வாசிம் ஜாபர் அடித்துள்ளார்.

வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!