வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (17/11/2015)

கடைசி தொடர்பு:10:41 (17/11/2015)

முருகன் பக்தி பாடல் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்!

சென்னை: பிரபல முருகன் பக்தி பாடல் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் சென்னையில் காலமானார்.

பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர், கோவையில் 1920-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார். 95 வயதான முருகதாஸ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருகன் பக்தி பாடல்களை பாடியுள்ளார் .

அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று பக்தி இசைக் கச்சேரிகளையும் முருகதாஸ் நடத்தி உள்ளார்.

தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள முருகதாஸ், திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார்.

தியாகராஜர் விருது, சங்கீத சாம்ராட் உள்பட பல இசை விருதுகளை பெற்றுள்ள பித்துக்குளி முருகதாஸுக்கு 1984-ம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கி  தமிழக அரசு கவுரவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்