“பேயை கண்டால் எனக்கு பயம்..!” - அனிருத்

ரெமோ படத்தின் பாடல்களைத் தனது ஹிட் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்ட அனிருத், தற்போது அடுத்த ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் முதல்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் ரம். இந்த படத்துக்காக அனிருத் இசையமைத்த பாடல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு ரிலீஸாகி இளசுகளின் மனசில் இடம் பிடித்தது.இரண்டாவதாக பேயோ என்ற பாடலும் வெளியானது. இன்று மீதி பாடல்களையும் வெளியிட்டுள்ளனர். 

ஆடியோவை வெளியிடுவதற்கு முன்பு பேசிய அனிருத், “ரம் திரைப்படம் நான் இசையமைக்கிற 13-வது படம். எதார்த்தமாக 13-வது படம் பேய்ப்படமாகவே அமைந்துவிட்டது. எனக்கு பேய் என்றால் பயம், அதனால் நான் பேய்ப்படங்கள் பார்ப்பதில்லை. விஜபி படத்துக்குப் பிறகு ரிஷி, ஹீரோவாக நடிக்க கதை கேட்டுட்டு இருந்தார். ஒரு நாள் என்கிட்ட வந்து ஒரு கதை கேட்டேன், எனக்கு பிடிச்சிருக்கு. நீ மியூசிக் பண்றீயானு கேட்டான். நானும் சரி பண்றேன்னு சொல்லிட்டேன். அதுக்கப்பறம் தான் தெரியும் இது பேய் படம்னு. நான் பேய் படமே பார்த்தது இல்லையே, பின்ன எப்படி இந்த படம் பண்ணமுடியும்னு கேட்டேன். உன்னால முடியும் பண்ணுனு சொன்னாங்க. நானும் பண்ணியிருக்கேன். கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்” என்று நம்பிக்கையுடன் பாடல்களை வெளியிட்டார் அனிருத். 

ஹலோ பாஸ், படத்தோட பெயரைப் பார்த்து தப்பா புரிஞ்சுக்காதீங்க. ரம் என்றால் தீர்ப்பு என்று இன்னொரு அர்த்தம் இருக்கு.

 படங்கள்: கிரண் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!