கமல்ஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் அறிக்கை விடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ஸ்ருதிஹாசன் எப்போதும் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட விரும்ப மாட்டார். அவரைப் பொருத்தவரை அவர் பெற்றோர், சகோதரி ஆகிய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்தான் விருப்பம்' என்று கூறியுள்ளார்.