அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் தொடங்கியது! | Admk MLA meet taking place in Royapettah

வெளியிடப்பட்ட நேரம்: 00:14 (06/12/2016)

கடைசி தொடர்பு:00:14 (06/12/2016)

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் தொடங்கியது!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நள்ளிரவில் மீண்டும் தொடங்கி உள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மேலும் மேலும் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மட்டும் இரண்டு முறை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. 

இன்று காலை 11 மணி அளவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் கூறியதை அடுத்து, மீண்டும் மாலை 6.30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல காரணங்களுக்காக தள்ளிப்போன எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், தற்போது நள்ளிரவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவுக்கு முதல்வர் அல்லது பொதுச்செயலாளர் பதவி தரப்படுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் மேலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close