கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்தியச் சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்! | Indian boy who wrote a letter to Santa

வெளியிடப்பட்ட நேரம்: 03:17 (19/12/2016)

கடைசி தொடர்பு:03:17 (19/12/2016)

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்தியச் சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்!

சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்  நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடை பெற்றுவரும் தாக்குதல்களால் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுகின்றனர். தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிரியாவில் நடக்கும் தாக்குதல்கள் பெரியவர்களை மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனதையும் காயப்படுத்தி இருப்பதற்கு இந்தச் சிறுவன் சிறந்த உதாரணம். இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆருஷ் ஆனந்த் என்ற ஏழு வயது சிறுவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். நாட்டிங்காம் உயர்நிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவருகிறான். சமீபத்தில் ஆருஷ் ஆனந்த் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆருஷ் ஆனந்த் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் வகுப்பில் மாணவர்களிடம் 'கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் என்ன பரிசு வேண்டும்?' என எழுதும்படி கூறியுள்ளார். உடனே  பேப்பர் எடுத்த மாணவர்கள், தங்களுக்குப் பிடித்தப் பரிசு பொருட்களை பட்டியலிட்டு எழுதியுள்ளனர். ஆனால் ஆருஷ் ஆனந்த், ' சிரியாவில் அமைதி நிலவவேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சிரியாவில் சமாதானம் திகழவேண்டும் அதுவே எனக்கான கிறிஸ்துமஸ் பரிசு' என  உருக்கமான கடிதத்தை எழுதியிருக்கிறான். சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் அப்பாவி சிறுவர்கள் கொல்லப்பட்டுவருவது இவனது மனதை பெருமளவு பாதித்துள்ளது. இச்சிறுவனின் கடிதத்தை ஆசிரியர் ரிச்சர்டு மில்லர் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

-என்.மல்லிகார்ஜுனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க