துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கைய நாயுடு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்! | Venkaiah Naidu resigns as cabinet Minister

வெளியிடப்பட்ட நேரம்: 02:47 (18/07/2017)

கடைசி தொடர்பு:06:53 (18/07/2017)

துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கைய நாயுடு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்!

வெங்கையா நாயுடுவுடன் மோடி

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்தியுள்ளனர். இவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில்  ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளாராக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் வெங்கைய நாயுடுவை நேற்று அறிவித்தது. 

வெங்கைய நாயுடு தொடர்ந்து நான்கு முறை ராஜ்யசபா உறுப்பினாராக இருந்து வருகிறார். பா.ஜ.க-வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் இவரை கட்சி முன்னிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 'தனது அனுபவத்தால் வெங்கைய நாயுடு ராஜ்யசபையைச் சிறப்பாக வழி நடத்துவார்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் வெங்கையா நாயுடு தான் வகித்து வந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


[X] Close

[X] Close